அது ஒரு கோடை காலம். எறும்பு நகரத்திலிருந்த அனைத்து எறும்புகளும் உணவு சேகரித்துக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த ஒரு சோம்பேறி எறும்பு மட்டும், ஒரு பாறையின் மேல், வானத்தைப் பார்த்தபடி படுத்து, சூரிய வெப்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது.
தன் அம்மாவும் சகோதரிகளும் உணவு சேகரித்துக் கொண்டிருக்க, அவர்கள் வருகைக்காக, விசில் அடித்துக் கொண்டு, பாறை மேல் காத்திருந்தது அந்த சோம்பேறி எறும்பு.
ஆனால், உணவு நேரம் வந்தால் மட்டும், துள்ளி குதித்து எழுந்து வந்தது.
தனக்கு எவரும் வேலை கொடுத்தால், ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து தட்டிக் கழித்தது சோம்பேறி எறும்பு. சில சமயங்களில், வேலையிலிருந்து தப்பிக்க அழவும் செய்தது.
வேலை செய்யும் நேரங்களில் பேசியே பொழுதை கழித்தது. அதனால், அதன் வேலை எப்பொழுதும்
முடிவடையாமல் இருந்தது.
ஒரு நாள், அது ஒரு பாறையின் மேல் அமர்ந்து வெட்டியாக பொழுதை கழித்துக் கொண்டிருப்பதை,
அதன்
அம்மா பார்த்தது.
அதன் அம்மாவிற்கு மிகுந்த கோபம் வந்தது.
சோம்பேறி எறும்பை ஒரு கோணி நிறைய உணவு சேகரிக்கப் பணித்தது. சோம்பேறி எறும்பு முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்தது. அம்மா தந்த வேலையை முடிக்காவிட்டால், உணவு கிடைக்காதென்று அதற்கு தெரியும்.
அன்றைய பொழுது முடியும் போது கோணி நிரம்பியிருந்தது. அம்மாவிற்கு தன் மகனின் கடின உழைப்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.
தன் மகனின் கடின உழைப்பை பாராட்டி, சிறப்பு இரவு உணவை தயார் செய்தது அம்மா எறும்பு.சோம்பேறி எறும்பு, தன்னை போல் கடினமாக உழைத்த மற்ற நண்பர்களுடன் அந்த உணவை
உண்டு களித்தது.
மறுநாள் காலை, சோம்பேறி எறும்பு முதல் ஆளாக எழுந்து, தன் அம்மாவிற்கு காலை உணவை தயார் செய்தது.
சோம்பேறி எறும்பின் இந்த மாற்றத்தை கண்டு மற்ற எறும்புகள் ஆச்சரியமடைந்தன. சோம்பேறி எறும்போ, ஓடி ஓடி மற்றவர்களுக்கு உதவியது.
எறும்பு நகரத்தின் தலைவர்கள், சோம்பேறி எறும்பின் இந்த மாற்றத்தை அதனுடன் சேர்ந்து கொண்டாடினர்.
அனைவருடன் சேர்ந்து உழைக்க வேண்டிய அவசியத்தை அன்று உணர்ந்தது அந்த எறும்பு.
சேர்ந்து வேலை செய்தால், வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் பெருகும் என்பதை புரிந்து கொண்டது.