sringeri srinivasanin pasu maa solluma

சிரிங்கேரி சீனிவாசனின் பசு ‘மாஆ’ சொல்லுமா?

வாழைத்தோப்பு சிரிங்கேரி சீனிவாசன் இப்போது ஒரு புதிய பிரச்சனையோடு வந்திருக்கிறார். அவரது பசு ‘மாஆ’ என்று கத்தவில்லை. அதனால் அவர் கோபமாக இருக்கிறார். சிரிங்கேரி தன் பசுவை முறைத்தார். அவரது குழந்தைகள் அவளுக்கு இனிப்புகளை ஊட்டினர். ஆனாலும் பசு ‘மாஆ’ என்று கத்தவில்லை. வித்தியாசமான திருப்பத்தோடு கூடிய இந்தக் கதையில் சிரிங்கேரியின் அன்பான குடும்பத்தோடும் அவரது புதிய பூனையான மனுலியோடும் இணைந்துகொள்ள வாருங்கள்.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள், வாழைத்தோப்பு சிரிங்கேரி சீனிவாசன், மாட்டுச் சந்தையிலிருந்து ஒரு புதிய பசுவுடன் வீட்டுக்கு வந்தார்.

“இவளை லக்ஷ்மி என்று கூப்பிடலாம்” என்றார் அவரது மனைவி பர்வதம்மா.

அட, லக்ஷ்மியின் பின்னால் யார்? அது பச்சைநிறக் கண்களோடு ஒரு கருப்பு வெள்ளைப் பூனை. “இவளும் எங்களோடு வழிநெடுக நடந்து வந்தாள்” என்றார் சிரிங்கேரி.

“இவளை மனுலி என்று கூப்பிடலாம்” என்றாள் அவரது மகள் உமா.

அடுத்த நாள், சிரிங்கேரி லக்ஷ்மியை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். மனுலியும் லக்ஷ்மியோடு சென்றாள். மற்ற பசுக்கள் அவர்களை ஆர்வமாகப் பார்த்தன.

மென்மையாக “மியாவ்” என்றாள் மனுலி.

பசுக்களும் வாலை ஆட்டிக்கொண்டே “மாஆ...” என்றன.

அவளைத் தடவிக்கொடுத்து, “நீ நல்ல லக்ஷ்மி” என்றார்.

மற்ற பசுக்களை விட லக்ஷ்மி அதிகமாக பால் கொடுத்தாள். சிரிங்கேரி மிகவும் மகிழ்ச்சியானார்.

மாலையானதும் பசுக்களிடம் பால் கறக்கும் நேரமும் வந்தது.

மற்ற பசுக்கள் திரும்பிப் பார்த்தன. யார் இப்படி ஒரு வேடிக்கையான சப்தத்தை எழுப்புவது?

அது ‘மாஆ’ இல்லை. பசு அளவில் ஒரு பெரிய ‘மியாவ்!’

உடனே, லக்ஷ்மி சத்தமாக “மியாவ்...” என்றாள்.

லக்ஷ்மி “மியாவ்...” என்று பாடினாள்.

மற்ற பசுக்கள் “மாஆ...” என ஆச்சரியத்தோடு கத்தின.

மனுலியும் “மியாவ்” என்றாள்.

“மியாவ்? ஏன் இந்தப் பசு ‘மியாவ்’ என்று கத்துகிறது?” என்று சிரிங்கேரிக்குப் புதிராக இருந்தது.

“எனக்கும் தெரியவில்லை. எப்படிக்

கத்தினால் என்ன!” என்று பர்வதம்மா, சிரிங்கேரியின் கோபத்தைத் தவிர்க்க முயன்றார்.

“அவள் வித்தியாசமாக இருக்கிறாள், அவ்வளவுதான். மனுலி அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவள் எவ்வளவு பால் தருகிறாள் பாருங்கள்!” என்றார்.

அடுத்த நாளும் அப்படியே நடந்தது. லக்ஷ்மி நிறைய பால் தந்தாள்.

பின் பசு அளவு “மியாவ்...” என்றாள். மனுலியும் பூனை அளவு “மியாவ்” என்றாள்.

இம்முறை மற்ற பசுக்களுக்கு

இது பிடிக்கவில்லை.

“மாஆஆ...” என்று ஒருசேரக் கத்தின.

“தயவுசெய்து பால் கொடுங்கள்” என்று வேண்டினார் சிரிங்கேரி சீனிவாசன்.

அவை லக்ஷ்மியை முறைத்துப் பார்த்தன. பால் தரவும் மறுத்தன.

ஆனால் பசுக்கள் “மாஆட்டேன்” என்று சொல்வது போல முகத்தைத் திருப்பிக்கொண்டன.

சிரிங்கேரி இந்த விசித்திரமான புதிய பசுவிடம் கோபப்பட்டார்.

“லக்ஷ்மியை திருப்பிக் கொடுக்கப் போகிறேன்” என்று தனது வழக்கமான முகச்சுளிப்புடன் சொன்னார்.

“ஆனால் அவள் நிறைய சுவையான பாலைத் தருகிறாள்! அவளை நாமே வைத்திருக்கலாமே!” என்றார் பர்வதம்மா.

“அப்படியானால், அவளுக்கு நாளைக்குள் ‘மாஆ’ என்று கத்தக் கற்றுக்கொடு! இல்லாவிட்டால் அவள் போகவேண்டியதுதான்!” என்றார் சிரிங்கேரி.

அடுத்த நாள் பர்வதம்மாவும் குழந்தைகளும் லக்ஷ்மியை ‘மாஆ’ என்று கத்தவைக்க முயன்றார்கள்.

மாஆ

சிரிங்கேரியின் புதிய கைபேசியில், மற்ற பசுக்கள் கத்தும் காணொளிகளைக் காட்டினார்கள். அவர்களும் ‘மாஆ...’ என்று கத்திக் காண்பித்தார்கள்.

மாஆ

லக்ஷ்மிக்கு ஆரத்தியும் எடுத்து, இனிப்புகளை ஊட்டினார்கள்.

மாஆ

அவர்கள் கடவுளிடம், “லக்ஷ்மி ‘மாஆ’ என்று கத்தவேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் உதவிக்கு வந்தனர். ஷிவண்ணா கரும்பு கொண்டுவந்தார். ஷங்கரா சோறு கொண்டுவந்தார்.

“மாஆ... என்று சொல்லு லக்ஷ்மி” என்று அனைவரும் சொல்லிப் பார்த்தார்கள்.

லக்ஷ்மிக்கு இந்தக் கவனிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவள் வழக்கத்தை விட அதிகமாக பால் தந்தாள்.

பிறகு “மியாவ்...” என்று வழக்கத்தை விட சத்தமாகக் கத்தினாள்.

“இவளை நாளைக்கே திருப்பிக் கொடுத்துவிடப் போகிறேன்! முட்டாள் பசு!” என்று சிரிங்கேரி உறுமினார்.

அப்போது, மூத்த மகன் சிவாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “அம்மா, இப்போதைக்கு லக்ஷ்மியையும் மனுலியையும் வீட்டின் மறுபக்கத்தில் வைப்போம்” என்றான்.

“அப்போது அவள் ‘மியாவ்’ என்று

கத்தினாலும் மற்ற பசுக்களுக்கு

அது கேட்காது.”

எனவே, லக்ஷ்மியைப் பழைய கொட்டகைக்குக் கொண்டு சென்றனர்.

அந்தப் புதிய வீட்டில், மனுலிக்கும் லக்ஷ்மியின் அருகே ஒரு சிறிய கூடை கிடைத்தது.

லக்ஷ்மி சென்றவுடன் மற்ற பசுக்கள்  வழக்கம்போல் பால் தரத் தொடங்கின.

மனுலி பண்ணையில் சுற்றித்திரிந்து, எல்லா பசுக்களுடனும் நட்பாகியது. பல இடங்களிலிருந்தும் மக்கள் ‘மியாவ்’ என்று கத்தும் பசுவைப் பார்க்கவந்தனர்.

அவளது சுவையான பாலைக் குடிக்க கூடுதலான பணம் கொடுத்தனர்.

சிரிங்கேரியின் பிரபலமான வாழைப்பழ அல்வாவையும் நிறைய வாங்கிச் சென்றனர்.

சிரிங்கேரி முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டார். லக்ஷ்மி வித்தியாசமான பசுவாக இருப்பது அவருக்குப் பெருமையாக இருந்தது. மற்ற பசுக்களும் அவளோடு நட்புகொள்ள விரும்பின.

திடீரென்று மனுலி “மாஆ!” என்றது.

ஒரு நாள் மாலை, குடும்பத்தினர் தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தனர்.

அது ‘மியாவ்’ அல்ல. பூனை அளவிலான ஒரு சிறிய ‘மாஆ’.

‘மாஆ?’ அனைவரும் பூனையை உற்றுப்பார்த்தனர். அது பசுவைப்போல வாலை ஆட்டியது.

“மாஆ?” சிரிங்கேரி கோபத்துடன் அதைப் பார்த்தார். “ஏன் இந்தப் பூனை ‘மாஆ’ என்று கத்துகிறது?” என்றார்.

ஆஹா! அது ஒரு தனிக்கதை.