ஹல்லோ!! நான் இங்கே இருக்கேன்! வரிசையில் நாலாவதாக நிற்கிறேன். என்னை பார்த்தியா?
லெப்ட், ரைட் ,லெப்ட், ரைட். நாங்க வரிசையா நடக்கிறோம்... சத்தமே போடாம!
எனக்கோ ஒண்ணு தோணுது. வேகமா போகணும். அதுக்கு நாலு வீல் பூட்டிக்க போறேன்.
வேறே விலங்குகள் மாதிரி நாங்க சத்தம் போட மாட்டோம். எங்க மொழி வாசனை தான்.
ஓரூ வாசனைச் சொல்லும்..."என் பின்னாடி வா - ஒரு விருந்து வா...
இன்னோரு வாசம் சொல்லும், "அங்கே போகாதே! ஆபத்து !!"
எனக்கும் உன்னை மாதிரியே கேக் பிடிக்கும். எல்லா இனிப்பும் பிடிக்கும்.
நான் வேலை செய்வதை பார்க்கணுமா? நான் குட்டியா இருக்கலாம். ஆனா நான் ரொம்ப பலசாலி.
கதவு அடைத்திருந்தால் என்ன? நான் சின்ன ஓட்டையில் கூட போவேனே!
நம்பினால் நம்புங்கள். நாங்க பல நூறு பேர் கூடஒண்ணா ஒரே வீட்டிலே இருக்கோம் .... சந்தோஷமா... ஒத்துமையா..
சில புது வார்தைகள் படிக்கலாம்.
சிறிய - பெரிய
மெதுவாக - வேகமாக
குள்ளம்-உயரம்
ஒல்லி-குண்டு
கடினமான -மெல்லிய (அ) கடினம்-மென்மை
சத்தம் - அமைதி