சுசீலா தமிழ்நாட்டில் வசிக்கிறாள். அவள் தன் அம்மாவிடமிருந்து கோலம் போடக் கற்றுக் கொண்டாள்.
சுசீலாவுக்கு, ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் ஒரே ஒரு கோலம் போட அனுமதி உண்டு.
கோலம் போடுவது என்றால் சுசீலாவுக்கு மிகவும் பிடிக்கும்!
அவள் தரையிலும் படிகளிலும் சுவர்களிலும் கோலம் போடுவாள்.
ரயில்களிலும் உயரமான கட்டிடங்களிலும்...
...வானத்தில் பறக்கும் பட்டங்கள் மீதும்தான்!
அனைவரும் சுசீலாவின் கோலங்களைக் கண்டு ரசித்தனர்!
ஒருநாள், விமானப்படையினர் ஒரு கோலம் உருவாக்க உதவும்படி சுசீலாவிடம் கேட்டனர்! விமானங்களை எப்படித் திருப்ப வேண்டும், இறங்கவும் ஏறவும் வேண்டுமென சுசீலா சொன்னாள்...
...சிறிது நேரம் கழித்து வானத்தில் ஒரு பெரிய, அழகான, வண்ணமயமான கோலம் தோன்றியது! நகரத்திலுள்ள எல்லோரும் பார்க்கும்படி!
அன்று இரவு, சுசீலா தனது மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து மின்னின. சுசீலா அடுத்து எங்கே கோலம் போடுவாள் என்று நினைக்கிறீர்கள்?
கோலங்கள், சில விவரங்கள்...
கோலங்கள் புள்ளிகளை சேர்த்தோ கையால் அப்படியே வரைந்தோ உருவாக்கப்படும் அழகான வடிவங்களாகும். புதிய நாளை வரவேற்க வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரிப்பார்கள். கோலங்கள் நல்வாய்ப்பைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, அரிசி மாவில்தான் கோலம் போடப்படும்.
மொக்கு, ரங்கோலி, சௌக்பூர்ணா, அல்பனா, ஹாசே சித்தரா என்று பல பெயர்களில் கோலங்கள் அழைக்கப்படுகின்றன. உங்கள் ஊரில் கோலத்தின் பெயர் என்ன?