susheelavin kolangal

சுஷீலாவின் கோலங்கள்

நீங்கள் உங்கள் வீட்டின் வாயிற்படியிலோ அல்லது பள்ளிக்கூடத்திலோ, கோலம் வரைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் என்றைக்காவது வானத்தில் கோலம் வரையப்படுவதை பார்த்திருக்கின்றீர்களா? சுஷீலா வானத்தில் எப்படி கோலம் வரைந்தாள் என்று தெரிய, தொடர்ந்து படியுங்கள்!

- Alagammai Meyyappan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுஷீலா தமிழ்நாட்டில் வசிக்கின்றாள்.

அவள் தன் அம்மாவிடம் இருந்து  கோலம் போட கற்றுக் கொண்டாள்.

ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் பொழுதும், சுஷீலா தன் கையாலே ஒரு கோலம் போடுவாள்.

சுஷீலா கோலம் போடுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தாள்!

தரையில் கோலம் வரைந்தாள்!

படிக்கட்டில் கோலம் வரைந்தாள்!

சுவரில் கோலம் வரைந்தாள்!

....அட! ரயில் வண்டிகளிலும், உயரிய  கட்டிடங்களின் சுவர்களிலும்....

...ஏன், உயரப் பறக்கும் பட்டங்கள் மீது கூட  கோலங்கள் வரைந்தாள் சுஷீலா.

அனைவரும் சுஷீலாவின் கோலங்களை  போற்றினார்கள்!

ஒரு நாள்,   விமானப் படையினர் சுஷீலாவை நாடி வந்தார்கள்.

வானத்தில் கோலம் போட உதவி  வேண்டி!

சில நிமிடங்களில், சுஷீலா விமான ஓட்டுநர்களுக்கு வானத்தில் எப்படி விமானத்தை சுழற்றி, சரித்தால்...

....ஊரில் அனைவரும் பார்க்கும் படியாக, ஒரு பெரிய, அழகிய  வண்ணக் கோலத்தை வானில் போடலாம் என்று காட்டினாள்!

அன்று இரவு, சுஷீலா தனது வீட்டீன் மேற்தளத்தில் நின்று வானத்தைப் பார்த்தாள்.

வானத்தை புள்ளியிட்ட நட்சத்திரங்கள் சுஷீலாவை நோக்கி மின்னின!

சுஷீலாவின் அடுத்த கோலம் எங்கே என்று  நினைக்கின்றீர்கள்?

கோலம் என்பது நேரடியாகவோ,

புள்ளிகளிட்டோ

வரையப்படும் வடிவமாகும். வரவேற்கும் விதமாக பலர்

தங்கள்வீட்டு வாசலை,கோலம் போட்டு

அலங்கரிப்பார்கள். கோலம் மங்களகரமாக கருதப்படுதுகிறது.

மரபின்படி, பச்சரிசி மாவை கோலப் பொடியாக பயன்படுத்துவர்.