இது என் வீடு. அம்மா, அப்பா மற்றும் சேனா இங்கு வாழ்கிறார்கள்.
வீட்டின் சிறந்த நாற்காலி எனக்கு இருக்கிறது. ஆனால் மடியில் உட்கார்ந்து இருப்பது இன்னும் நன்றாக இருக்கிறது, இல்லையா?
சேனா என் சிறந்த தோழி. ஆவள்பள்ளியில் இருந்து திரும்புவதற்காக நான் காத்திருப்பேன்.
நான் தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்கிறேன். டாமி போல எனக்கு குளியல் தேவையில்லை.
ஷூ ... நான் இங்கே மறைந்து கொண்டிருக்கிறேன் என்று யாரிடமும் சொல்லாதே.
1 ... 2 ... 3 ... பிடித்து விட்டேன்!
நான் தோட்டத்திலிருந்த ருசியான உணவை கொண்டுவந்தால், அம்மா சத்தமிடுவார்கள்
நான் மரங்களை ஏற முடியும். நான் குதிக்க முடியும். எனக்கு இங்கே அனைத்து குறுகிய பாதைகளும் தெரியும்.
சஞ்சு எங்கள் வீட்டீன் அருகில் வசிக்கிறான். அவன் என்னை கிண்டல் செய்கிறான். இது எனக்கு மிகவும் கோபமாக இருக்கிறது
சஞ்சயிடம் தயவு செய்து சொல்லுங்கள், புலி எங்கள் பூனை குடும்பத்தில் இருந்து வருகிறது. எங்களுக்கு கூர்மையான நகங்கள் உண்டு.
சில சமயங்களில் என் நண்பர்கள் இரவில் நிறைய சத்தம் செய்கிறார்கள். நான் படுக்கையில் அமைதியாக இருக்கிறேன்.
வால்கள் பேசலாம்!
விலங்குகள் மற்றும் பறவைகள் தங்கள் வால்களைப் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு என்ன சொல்லுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு நாய் அதன் வால் ஆட்டுகிறது. அது கோபமாக இருக்கும் போது ஒரு பூனை அதன் வாலை தூக்குகிறது
பெரும்பாலும் நாம், "ஒரு பூனையை போல சுத்தமாக" என்று கூறுகிறோம். ஏனெனில்பூனைகளுக்கு தண்ணீரை பிடிக்காது. அதனால் அவை தங்களை நக்கீ நக்கீ சுத்தமாக வைத்திருக்கின்றன.