arrow_back

சுயமரியாதைக்கும் ஒரு விலை

சுயமரியாதைக்கும் ஒரு விலை

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

தானா அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது.