தம்புவும், உறவினர்களும்.
தம்புவின் பட்டம்
அறுந்துவிட்டது.
பட்டத்தை எடுக்க ஓடினான்.
அப்பாவும் உதவிக்கு வந்தார்.
அப்பாவுக்குப் பின்னால் அம்மாவும் ஓடினார்.
அம்மாவுக்குப் பின்னால் தங்கை ஓடினாள்.
தங்கைக்குப் பின்னால் அத்தையும்...
அடடே..! மாமாவும் ஓடுகின்றார்.
இது யார் பின்னால்?
யாரெல்லாம் மாமாவுக்கு முன்னால் ஓடுகின்றார்கள்?
ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்...
எல்லோரும் ஓடுகின்றார்கள்.
தம்புவுக்குப் பின்னால் யாரெல்லாம்?
அப்பாடா..! பட்டம் கிடைத்தது.