பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்செல்வி ஒரு குழந்தையாக இருந்த போது அவள் தன் தாத்தா, பாட்டியுடன் ஒரு திருமணத்திற்குச் சென்றாள்.
அந்த திருமணத்திற்கு நிறைய பேர் வந்திருந்தனர். அதில் பெரும்பாலானோர் உணவருந்தும் இடத்தருகே இருந்தனர்.
அப்போது பாட்டி தமிழ்செல்வியை தொலைத்துவிட்டாள்.
பொதுவாக எந்த பொருள் காணாமல் போனாலும் பாட்டி கவலைபடமாட்டாள். அது சீக்கிரமே கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருப்பாள்.
ஆகையால் இதற்கும் அவள் கவலை படவில்லை.
அப்போது, தமிழ்செல்வி ஒன்றரை வயதே ஆன குழந்தை. அவள், என்ன செய்வது என்று தெரியாமல் கவலையோடு இருந்தாள்.
சிறுபிள்ளைபோல் அழாமல் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
ஆனால், ஒரு சிறுமியால் அந்த
பெருங்கூட்டத்தில் அனைவரின் முகத்தைப் பார்த்து தன்னுடன் வந்தவர்களை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.
சரியான நபரை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அங்கு வந்திருந்தவர்களின் காலணிகளை வைத்து எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
அதைத்தான் தமிழ்செல்வியும் செய்தாள். அவள் ஒரு இடத்திலிருந்து தன் தாத்தா, பாட்டியை தேட ஆரம்பித்தாள்.
அவள் ஒவ்வொரு பெண்களின் சேலையை விலக்கி காலணிகளை பார்த்தாள். தனக்கு பழக்கமான சேலை மற்றும் செருப்பு அணிந்தவரை பார்த்ததும் முகத்தையும் பார்த்தாள். அவள் தன் பாட்டிதான் என்று உறுதிசெய்தாள்.
உடனே பாட்டி தமிழ்செல்வியை மகிழ்வுடன் தூக்கினாள். பின்பு, தன் கணவரிடம் "பார்த்தீர்களா, நான் சொன்னது போல எது தொலைந்தாலும் கவலைப்பட தேவையில்லை, அது மறுபடியும் நமக்கே கிடைத்துவிடும்".