தாட்டோவின் பிறந்தநாள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதாவது, இன்னும் முழு ஏழு நாட்கள்!
"உன் பிறந்தநாள் பரிசு உனக்கு மிக பெரிய ஆச்சரியமாக இருக்கும்!" என்று தாட்டோவின் அம்மா சொன்னார்.
"அது என்னவாக இருக்கும்?" என்று தாட்டோ வியப்புடன் யோசித்தான்.
திங்கள்கிழமை அன்று தாட்டோ, "ஒரு வேளை எனக்கு ராட்சத சிறகுகள் வந்துவிடுமோ. நான் பறவை போல் வானத்தில் உயரத்தில் பறக்கலாம்..." என்று நினைத்தான்.
செவ்வாய்கிழமை அன்று தாட்டோ, "ஒரு வேளை என்னுடைய பிறந்தநாள் கேக் இந்த வீட்டை போல பெரிதாக இருக்குமோ?" என்று நினைத்தான்.
புதன்கிழமை அன்று தாட்டோ, "ஒரு வேளை எனக்கு நிலா வரை பறந்து செல்ல ஒரு ராக்கெட் கிடைக்குமோ?" என்று நினைத்தான்.
வியாழக்கிழமை அன்று தாட்டோ, "ஒரு வேளை எனக்கு மீனை போல தண்ணீரில் நீந்தி செல்ல துடுப்புகள் கிடைக்குமோ?" என்று யோசித்தான்.
"ஒரு வேளை நான் ஆயிரம் பந்துகளை இலக்கில் அடிக்க மந்திர சக்தி உள்ள கால்பந்து காலணி கிடைக்குமோ!" என்று வெள்ளிக்கிழமை அன்று தாட்டோ நினைத்தான்.
"ஒரு வேளை புதையல் நிறைந்த பெட்டியை திறக்க ஒரு சாவி கிடைக்குமோ?" என்று சனிக்கிழமை அன்று தாட்டோ யோசித்தான்.
தாட்டோவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. தாட்டோவின் அம்மா சிரித்துக்கொண்டே, "இங்கே வந்து உன் ஆச்சரியத்தை பார்!" என்றார்.
தாட்டோவின் பெரிய அண்ணன் குட்ஜை பெரிய நகரத்தில் இருந்து தாட்டோவை பார்க்க வந்திருந்தார். தாட்டோவிற்கு இதுவரை கிடைத்த மிக சிறந்த பரிசு இதுதான் ஆகும்.
தாட்டோ சிரித்தான், சிரித்தான், சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் அண்ணன் அவனை கையில் மேலே காற்றில் தூக்கி அணைத்து கொள்கிறார். " என் சின்ன தம்பியே, உன் பிறந்தநாளுக்கு உனக்கு என்ன வேண்டும்?" என்று குட்ஜை கேட்டார்.
அன்று நாள் முழுதும் என்ன
செய்ய போகிறார்கள் என்று
தாட்டோவிற்கு தெரியும்.