சிங்கம் அந்த காட்டிற்கு ராஜா. ஒரு நாள் அது, அந்த நகரத்தின் ராஜாவை கண்டது. அவர் ஒரு யானையின் மேல் கம்பீரமாகவும், பெருமையுடனும் அமந்திருந்தார்.தானும் அது மாதிரி செய்ய வேண்டும், என அந்த சிங்கம் நினைத்தது.
அது காட்டில் யானையை வரவழைத்தது. அது என்ன செய்ய விரும்புகிறது என்பதை அதனிடம் கூறியது. அந்த ஏழை யானை எச்சரித்தது. " மகாராஜா, நீங்கள் ஏன் அந்த நகர ராஜா மாதிரியே செய்ய விரும்புறீங்க? " என்றது அந்த யானை.
சிங்கம் பிடிவாதமாக இருந்தது. சிங்கம் யானையின் மீது இரண்டு பக்கங்களிலும் ஒரு காலை வைத்து அமர்ந்திருந்தது, ஆனால் அது ஒழுங்காக அமர்ந்திருந்ததாக தெரியவில்லை. அது வேடிக்கையாக இருந்தது!.
குரங்கு கூறியது, "ராஜா அம்பாரியில் அமர்ந்திருந்தார். அவர்கள் வெறுமனே யானையின் பின் அமர்ந்து சவாரி செய்யமாட்டார்கள்!" சிங்கம் கூறியது " அம்பாரி செய்பவரை அனுப்பு!"
அம்பாரி செய்பவர் வந்தார். அவர் அரச அம்பாரியை செய்தார். அந்த அம்பாரி யானையின் பின்பக்கம் பொருத்தப்பட்டது. சிங்கம் மேலே குதித்து,அதன் மீது அமர்ந்தது.
யானை சில அடிகளை வைத்தவுடன், அம்பாரி ஆடத் தொடங்கியது. அது சரியாக கட்டப்படவில்லை. அது மரத்தின் கிளையில் மோதி கவிழ்ந்தது.
பெரிய காயங்களுடன் சிங்கம் கீழே விழுந்தது. சிங்கம் மீண்டும் யானையின் மேல் அமரவில்லை. சிங்கம் கூறியது, "நடந்து செல்வதே மேலானது என நினைக்கிறேன் ".