குழந்தை: "அம்மா! என்னால இதுக்கு மேல இந்த இருட்டு அறையில இருக்க முடியாது. ப்லீஸ்! என்ன காப்பாத்துங்க. என்ன வெளிய விடுங்க."
அம்மா: "செல்லம்! கவலை படாதே. அம்மா இங்க தான் இருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு மா!"
கொஞ்ச நாள் கழிச்சு...
குழந்தை: "இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. நானே முயற்சி பண்றேன்."
அம்மா : " அட! செல்லக்குட்டி. எவ்ளோ அழகா இருக்க. இந்த நல்ல பச்சை இலைகள், சாப்பிடு."
குழந்தை:
"உவெக்! நல்லாவே இல்ல. எனக்கு நீ சாப்பிடும் அந்த இனிப்பு தேன் தான் வேண்டும்."
அம்மா : "இல்லம்மா செல்லம்! அதுக்கு நீ இன்னும் பெருசா ஆகணும். இப்போ நீ இந்த இலையை சாப்பிடு."
அம்மா : " இன்னும் நிறைய இலைகள் சாப்பிடு, அப்போதான் நல்ல பலசாலியா ஆக முடியும்."
குழந்தை:
"ச்சே! சாப்பிடு சாப்பிடுனு.
நான் தான் எப்பவும் அவள் சொன்ன பேச்ச கேக்கணுமா?
அவள் மட்டும் அழகான பூக்களிலிருந்து சுவையான தேனை சாப்பிடுவாள். ஆனால் எனக்கு மட்டும் இந்த கசப்பு இலையா? ஆ..."
அம்மா: "செல்லம்மா! இன்னும் தூங்கலையா? நேரமாச்சு. தூங்கும்மா."
குழந்தை: " போ அம்மா! நான் தூங்க மாட்டேன். நீ சொல்ற படி தான் எப்பவும் கேக்கணுமா? நீ மட்டும் சந்தோஷமா இருக்க. ஆனால் நான்???"
அம்மா: "குட்டிம்மா! எப்போதும் நான் சொல்றத கேக்கணும்னு கிடையாது. ஆனால் நான் உனக்கு நல்லதை மட்டும் தான் சொல்வேன். அதை ஞாபகம் வெச்சுக்கோ.
சரி போ. தூங்க போறேன். அட்வைஸ் பண்ணாத."
குழந்தை: " ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. ஒரே சோம்பலா இருக்கு.
அம்மா! அம்மா! எங்க இருக்க? இங்க பாரு. நானும் உன்னை மாதிரி பட்டாம்பூச்சியா மாறிட்டேன்."
அம்மா : "ரொம்ப சந்தோஷம்! நல்லபடியா ஒரு பட்டாம்பூச்சியா மாறிட்ட. "
குழந்தை: " உன்னால தான் நான் ஒரு அழகான பட்டாம்பூச்சியாய் ஆனேன். நன்றி. அம்மா நான் என்ன செய்யணும் இனி?"
அம்மா : வலிமையான சிறகுகள் நீ பட்ட கஷ்டத்தின் பலன். "பறந்து செல்!"