இங்கே இல்லை, அங்கே இல்லை.
நீ எங்கே போனாய்?
சோபா மேல் இல்லை..
கட்டிலின் கீழே இல்லை.
பெட்டியில் இல்லை.
என் தங்கையின் சட்டை கீழே இல்லை.
தலையணையின் கீழே இல்லை.
என் பையில் இல்லை.
உம்...உ...உம், நீ எங்கே போனாய்?
நான் எல்லா அறையிலும் பார்த்துவிட்டேன்.
நான் எல்லா புத்தகங்கள் அடியிலும் பார்த்துவிட்டேன்.
நாற்காலி கீழே பார்த்தேன்.
முக்காலி கீழே பார்த்தேன்.
நீ எங்கே போனாய்?
பாட்டி நடைபயிற்சி முடித்து வந்தார்.
"பூங்காவில் இது கிடைத்தது" என்று சொன்னார்.
இது குதிக்கும், இது அசையும்.
இது சுற்றும், இது ஆடும்.
பாட்டி சிரித்தார்.
ஏ பாட்டி, மிக்க நன்றி என்று நான் சொன்னேன்.
நீங்கள் என் யோ-யோவை கண்டு பிடித்துவிட்டீர்கள்!
யோ-யோ, என்ன வேடிக்கையான பெயர்! என்ன வேடிக்கையான விளையாட்டுப் பொருள்!
நான் இதை விளையாடுவேன், எனக்கு மிக்க மகிழ்ச்சி!
சிரித்து, சிரித்து பாட்டி முழு நாளும் யோ-யோ விளையாடினார்!