தேடினேன்...
தவளை
ஒன்றைத் தேடினேன்
இளஞ்சிவப்பு பூவிலா?
ஊதா நிறச் செடியிலா?
பச்சைப் பூனை மடியிலா?
சிவப்பு நண்டுக் குகையிலா?
பழுப்புத் தண்டின் இடுக்கிலா?
நீலக் குளத்தின் அடியிலா?
கண்டுவிட்டேன் தவளையை!
வண்ணப் பூங்கா நடுவிலே!