சோனு, மோனு மற்றும் ரீனா விளையாட வெளியே சென்றனர்.
அங்கே ஒரு பூனைக் குட்டியைப் பார்த்தார்கள்.
அந்த பூனைக் குட்டி ஒரு பெரிய எலியைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
"அங்கே பாருங்கள்!" என்று சத்தமிட்டான் சோனு.
ரீனா ஒரு குட்டி எறும்பு அந்த பெரிய எலியை நோக்கிச் செல்வதைப் பார்த்தாள்.
திடீரென்று, ஒரு மிகப் பெரிய நிழல் அவர்கள் மேல் விழுந்தது.
ஒரு மிகப் பெரிய கழுகு அங்கு இருந்த சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்தது.
ஓ! அந்த நீண்ட தெருவில் ஒரு குட்டி எறும்பு, ஒரு பூனைக் குட்டி, ஒரு பெரிய எலி மற்றும் ஒரு மிகப் பெரிய கழுகு!
அந்த மூன்று புத்திசாலி சிறுவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
அவர்கள் தங்கள் சிறிய கைகளைத் தட்டினார்கள்!
அதனால் அந்த கழுகு அதன் பெரிய இறக்கைகளை விரித்துப் பறந்துச் சென்றது.
ரீனா அந்த எறும்பை ஓர் இலை மேல் ஏற வைத்தாள். அந்த இலையைச் சுவற்றின் மேல் வைத்தாள்.
அந்த எறும்பு ஒரு துளி சர்க்கரையை பார்த்தது. அதனை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டது.
அந்த பெரிய எலி அங்கு கிடந்த ஒரு பாதி பக்கோடாவைத் தூக்கிக் கொண்டுச் சாக்கடைக்குள் ஓடியது.
அந்த பூனைக் குட்டி 'மியாவ்' என்று கூச்சலிட்டு தன் பாதத்தை நக்கத் தொடங்கியது.
மோனு அதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிது பால் கொண்டு வந்தான்.
பின்னர் இந்த மூன்று சிறுவர்களும் அதனுடன் விளையாடினர்.
மரத்தில் உட்கார்ந்திருந்த அந்த பெரிய கழுகு, சிறிது நேரம் விழித்துப் பார்த்துவிட்டு பறந்து சென்றது.