தெருவோட சத்தம் கேளு
Veronica Angel
விடியகாலையில இடியாப்பம் விக்குற பாட்டியோட குரல்தான் இந்த தெருவையே எழுப்பி விடும். ஜவ்வு மிட்டாய் தாத்தா வர்ற சத்தம் கேட்டா சிறுவர்கள் எல்லாம் அடிச்சு பிடிச்சு ஓடுவாங்க. இந்தக் குட்டி தெருவில தினம்தினம் எத்தன எத்தன விதவிதமான குரல் கேட்கும் தெரியுமா? அட யார் குரலோ கேட்குது. வாங்க யாருன்னு போய் பார்க்கலாம்.