தெருவோட சத்தம் கேளு கேளு
டிகடிக டாங்...
பாம் பப்பாம்... பம்!
தூரத்தில இடி சத்தம் கேட்குதா?
டிகடிக
டிகடிக
டிங்ங்ங்!
இடியாப்பம், இடி இடி இடி இடியாப்பம்! பொடி பொடிச்ச சக்கர, வடிச்செடுத்த தேங்கா பாலோட, இடி இடி இடியாப்பம்!
மூணு இடி இடி இடியாப்பம், அஞ்சே ரூபாய்க்கு கிடைக்கும்.
பாம்
பாம்
பாம்
வாங்க, வாங்க, கோலப்பொடி வாங்குங்க. மரகதப் பச்சை, பொன் மஞ்சள், இரத்தின சிவப்பு,
மயில் கழுத்து, கிளி பச்சை, ரங் ரங் ரங்கோலி கோலமாவு! விதவிதமா போடுங்க, வீட்டுக்கு வருவாங்க விருந்தாளிங்க.
பம் பரபம்பம் பம் பரபம்பம், பம்பரபம்பம் பாபாங்ங்ங்ங்! இழுக்க இழுக்க வரும் பாரு ரோஸ் கலரு மயிலு,
பளபளக்கும் வாட்சு, பத்து விரலுக்கும் மோதிரம்! ஜவ்வ்வ்வு மிட்டாய் ஜிலேபி, ஓடி வந்தா கிடைக்கும்.
மீமீமீ... மீனு வாங்கலையோ மீனு மீன்ன்ன்னு! இறா, நண்டு, வஞ்சரம், கோ..கோ..கோலா! நெத்திலி, மத்தி, ஜிலேபி, ச்சீ..ச்சீ..சீலா!
பொரிக்க ஒரு மீனு, வதக்க ஒரு மீனு, குழம்பு வைக்க ஒரு மீனு. மீமீமீ... மீனு வாங்கலையோ மீனு மீன்ன்ன்னு.
பேப். பேப். பேப். பழைய பேப்பர்ர்ர்… படபடக்கும் தந்தி சிரிசிரிக்கும் கல்கி எல்லாத்தையும் கொண்டு வாங்க.
அம்புலிமாமா எப்பவும் ஒளிஞ்சிட்டு இருப்பாருங்க. துப்பறியும் சாம்புவிடம் சொல்லி தேடி பிடிச்சு கொண்டு வாங்க.
சுக்கு சுக்கு சுக்கு காபி… சூடான சொக்கு காபி. பருத்தி பாலும் இருக்குது, வறுத்த முந்திரி போட்டது.
சில்லரையோட சீக்கரம் வந்தா சுடசுட சுட கிடைக்கும். இல்லைன்னா நடைய கட்டும் காகா காஆஆபி சொக்கு காபி!
பொ பொ பொ பொருள் விளங்கா பொரி உருண்டை... ஆ ஆ அச்ச்ச்சூ முறுக்கு, லட்டு, கமர்கட்டு, தி தி தித்தித்திக்கும் பனியாரம்!
பொருள் விளங்கா உருண்டக்குள்ள என்ன என்ன பொருள் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொன்னாக்கா, தித்திக்கும் பனியாரம் இலவசம் இலவசம்!
பூ வுய்ய்ய்ய்.. மல்லி மல்லி, குண்டு மல்லி, அடுக்கு மல்லி, கனகாம்பரம், செவ்வந்தி, பிச்சி பிச்சி, பூ பூ பூ வுய்ய்ய்ய்ய்...
குண்டுமல்லி வேணுமுன்னு குதிச்சு அழுது குட்டி பாப்பா, குட்டி பாப்ப்பா, தலையில முடியத்தான் காணுமே!
பூ பூ பூ பூவுய்ய்ய்ய்ய்ய்!” ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஜில் ஜில் ஜில்ஜில் ஐஸ்ஸ்ஸ்ஸ்! சேர்ந்து சாப்பிட சேமியா ஜவ்வரிசி ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
கொளுத்தும் வெயிலுக்கு குளு குளுன்னு பால் ஐஸ்ஸ்ஸ்! டிங் டிங் டிங்டிங் ஐஸ் ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
தெருவோட சத்தம் கேளு. தெருவுக்கு வண்ணம், வாசனை, நல்ல ருசியும் உண்டு.
டிகடிக டாங்
தூரத்தில சத்தம் கேட்குதா?
டிங்ங்ங்
டிகடிகடிங்ங்ங்!