திங்கட்கிழமை ஒரு ஆணாக இருந்தால்,
அவர் ஒரு பள்ளி முதல்வராக இருந்திருப்பார்.
அவருடைய புருவங்கள் கம்பளிப்பூச்சிக்கள் போல இருந்திருக்கும்
மற்றும் அவருடைய கணீர் குரல் சுத்தியலின் அடியை போல இருக்கும்.
" எழுந்திரு. இது படிக்கும் நேரம்" என்று அவர் கூறி இருக்கலாம்.
திங்கட்கிழமை ஆனால், எனக்கு ஒளிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது.
செவ்வாய் கிழமை ஒரு பெண்ணாக இருந்தால், அவர் ஒரு வயதான அத்தையாக இருந்திருப்பார்.
அவருடைய புடவை தூசியின் நிறத்தில் இருந்திருக்கும். ஒவ்வொறு வாரமும் வருகை தந்திருப்பார். அவர் தேநீர் குடித்து கொண்டு, பேசுவார், பேசுவார், பேசிக் கொண்டே இருந்திருப்பார்.
நாங்கள் கொட்டாவி விட்டபடி, அவர் பேசி முடிப்பதற்காக காத்திருப்போம். செவ்வாய்கிழமை வாரத்தின் மெதுவான நாள்.
புதன்கிழமை ஒரு சிறுமியாக இருந்தால், அவள் ஒரு ஊதா கண்ணாடியை அணிந்து இருந்திருப்பாள்.
அவள் சுத்தமான சீருடை அணிந்து இருப்பாள் மற்றும் மூன்று கூர்மையான கரிக்கோலை வைத்து இருந்திருப்பாள். அவள் கூட்டல் கணக்குகளை சரியான விடையுடன் முடித்து விட்டு, பாலைக் குடித்து விட்டு, புத்தகப் பையில் அடுக்கி கொண்டு இருந்திருப்பாள்.
கரிக்கோல் - Pencil
புதன்கிழமை ஒரு பரபரப்பான நாள்.
வியாழாக்கிழமை சிறுவனாக இருந்தால், ஒரு மஞ்சள் கொசுவு சட்டையை அணிந்து இருந்திருப்பான். அவன் தலை முழுக்க ஓடி கொண்டிருக்கும் சிந்தனைகள் சுறுசுறுப்பான உடற்பயிற்சிகளும், குச்சி மிட்டாய்களும் ஆக இருக்கலாம்.
கொசுவு சட்டை - T - Shirt
அவன் குதித்து ஓடி இருந்திருப்பான். அவன் அவசரத்தில் இருந்திருப்பான்.
வியாழக்கிழமை அன்று, நான் மகிழ்ச்சியான திட்டங்களை தீட்டுவேன்.
வெள்ளிக்கிழமை அக்காவாக இருந்திருந்தால், அவள் நண்பர்களை சந்திப்பதற்காக தயாராகிக் கொண்டிருப்பாள். அவள் சிரிப்பும் இளிப்பும் ஆக இருந்திருப்பாள்.
அவள் காதுகளில் நட்சத்திரங்களை அணிந்து கொண்டும், கண்களில் நட்சத்திரங்களையும் கொண்டு இருந்திருப்பாள்.
சில நேரங்களில், எல்லா நாட்களும் வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சனிக்கிழமைக்கு மின்னும் புன்னகை இருந்திருந்தால், அது என்னுடைய உயிர் தோழனை போலிருக்கும்.
நாங்கள் நொண்டி விளையாடி இருந்திருப்போம்.
நாங்கள் புத்தகங்கள் படித்து இருந்திருப்போம் .
நாங்கள் உட்கார்ந்திருந்து மழையை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்திருப்போம்.
சனிக்கிழமைகள் எப்பொழுதும் முடிய கூடாது என்று நான் விரும்புகிறேன்.
ஞாயிற்றுக்கிழமை வழுக்கையான தாத்தாவாக இருந்திருந்தால், அவர் சாப்பிட்டு, தூங்கிட்டு, கதைகள் சொல்லி இருந்திருப்பார்.
அவர் காலையில் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், ஆனால் மாலையில் அனைத்தையும் கடந்தவர் ஆக முன்கோபத்துடன் இருந்திருப்பார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நான் தலைக்கு குளிப்பேன். மற்றும் திங்கட்கிழமையைப் பற்றி யோசிக்காமல் இருக்க முயற்சிப்பேன்.
திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை
புதன்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை
எது உங்களுக்கு பிடித்த நாள்?