ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்! ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பாக இன்னொருவரிடம் சொல்வது எப்படி?
வேறு யாருக்கும் கேட்காமல் மெல்ல சொல்லலாம்.
எனக்கு வேட்டையாடப் பிடிக்காது.
இதுதான் காரணமா!
ரகசிய ஓலை எழுதி அனுப்பலாம்.
ஆனால் அது தவறான கைகளில் கிடைத்து விடலாம்.
ரகசியங்களைக் குறியீட்டு புதிர்களாக மாற்றலாம்.
ஆனால் வேறு யாரேனும் புதிர்களை அவிழ்க்கலாம்.
அதை நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிரலாம்.
ஆனால் வேறு யாரும் நண்பரைப் போல் நடித்து அதைத் தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்கள் இருக்கும் வரை ரகசியங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
ரகசியங்கள் இருக்கும் வரை, அவற்றை திருட முயற்சிப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
கணினிகளும் இணையமும் வந்தபிறகு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மிகவும் எளிதாகிவிட்டது.
ஆனால், ரகசியத்தைத் திருடுவதும் இவற்றால் எளிதாகிவிட்டது.
சில நேரங்களில், ரகசியச் செய்திகளை அனுப்புகிறோம் என்பதே உங்களுக்குத் தெரியாது.
அவற்றைப் பிறர் கண்டுபிடித்து விடக்கூடுமென்றும் தெரியாது.
சனா.
ஷே கெம்பேகௌடா விமான நிலையம்.
பெயர்: சனா ஷேக் புறப்பாடு: பெங்களூர் சேருமிடம்: ஆம்ஸ்டர்டாம். தொலைபேசி எண்: 0000000000
மின்னஞ்சல்: [email protected] புறப்படும் நேரம்: 18:25 சேரும் நேரம்: 06:45 இருக்கை எண்: 14அ
தகவல் திருடுபவர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துத் திருடுகிறார்கள்.
அவர்கள் எளிதில் உள் நுழைந்துவிடுவார்கள்.
வங்கி விபரங்களை உள்ளிடுங்கள், பெரிய பணப்பரிசை வெல்லுங்கள்!
திருடப்பட்ட ரகசியத் தகவல்களை வைத்து, வேறொருவரைப் போல் நடித்து, பிறர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவார்கள். அல்லது, வேறு குற்றங்களைப் புரிவார்கள்.
ஆனால், கவலைப்பட வேண்டாம்! உங்கள் தகவல்கள் பல்வேறு வழிகளில் பாதுகாக்கப்படுகின்றன.
அதற்குப் பெயர்தான் இணையப் பாதுகாப்பு!
வங்கி விபரங்களை உள்ளிடுங்கள், பெரிய பணப்பரிசை வெல்லுங்கள்!
ஏமாற்றுவேலை!
இணையப் பாதுகாப்புப் பொறியாளர்களும் ஆய்வாளர்களும் தகவல் திருடுபவர்களின் வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது, பல புதிய பாதுகாக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
தகவல் திருடன்
இணையத்தில் தகவல்களை எச்சரிகையுடன் பரிமாறிக் கொள்வதனால் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களின் வேலையை எளிதாக்கலாம்.
இணையத்தில் கவனமாக இருப்பது எப்படி:
1. உங்களுடைய மொபைல் எண், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரியை இணையத்தில் பகிராதீர்கள். 2. உங்களுக்குப் பரிசுப் பொருள் அல்லது விலையுயர்ந்த பொருள் கிடைத்திருக்கிறது என உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களையோ இணைப்புகளையோ திறக்காதீர்கள். 3. உங்கள் கடவுச்சொல்லை யாரும் எளிதில் கண்டுபிடித்திட முடியாதபடி அமைத்துக் கொள்ளுங்கள். 4. சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படம் அல்லது பதிவை இடும்பொழுது அதை உங்கள் அம்மா, அப்பா அல்லது நண்பர்கள் காண நேரிட்டால் அவர்கள் முகம் சுளிக்காமல் இருப்பார்களா என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள். அப்படி இல்லாவிட்டால், பதிவிடாதீர்கள். 5. இணையத்தில் முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். 6. அப்படி ஒருவர் உங்களுடன் பேச முயன்று, நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நம்பிக்கையான பெரியவர்களிடம் தெரிவியுங்கள்.