நான் டிம்மி.
இந்த நாய் குட்டி பிப்பி, என் நண்பன்.
எனக்கு பிப்பியை கேலி செய்ய பிடிக்கும்.
நான் உன்னை விட சிறந்தவள் என்று பிப்பியிடம் சொன்னேன்.
அவனுக்கு அது பிடிக்காது.
“எனக்கு மூக்கு இருக்கிறது!” என்று நான் சொன்னேன் .
பிப்பி குரைத்தான். அவனுக்கும் மூக்கு உள்ளது என்று அர்த்தம்.
"எனக்கு காது இருக்கிறது", என்று நான் சொன்னேன்.
பிப்பி குரைத்தான். அவனுக்கும் காது உள்ளது என்று அர்த்தம்.
"எனக்கு கண்கள் இருக்கின்றன", என்று நான் சொன்னேன்.
பிப்பி குரைத்தான். அவனுக்கும் கண்கள் உள்ளது என்று அர்த்தம்.
"எனக்கு கால்கள் இருக்கின்றன, நடனம் ஆடுவேன்", என்று நான் சொன்னேன்.
பிப்பி குரைத்தான். அவனுக்கும் கால்கள் உள்ளது என்று அர்த்தம்.
"எனக்கு நாக்கு இருக்கிறது", என்று நான் சொன்னேன்.
பிப்பி குரைத்தான். அவனுக்கும் நாக்கு உள்ளது என்று அர்த்தம்.
"எனக்கு சிந்திக்க முடியும்", என்று நான் சொன்னேன்.
பிப்பி உரக்கக் குரைத்தான். அவனுக்கும் சிந்திக்க முடியும் என்று அரத்தம்.
"எனக்கு கைகள் இருக்கின்றன", என்று நான் சொன்னேன்.
பிப்பி உறுமி, வாலை ஆட்டினான். அவனுக்கு வால் இருக்கிறது, எனக்கு இல்லை என்று அர்த்தம்.
எனக்கு பிப்பியை பிடிக்கும், அவனுக்கும் என்னை பிடிக்கும்.
இந்தப் படத்தில் இவைகளை கண்டுபிடி:
கைகள், மூக்கு, கண்கள், கால்கள், நாக்கு, காதுகள்