திராவின் பிறந்த நாளுக்கு, அவளின் அம்மா ஒரு சிறப்பான பரிசு கொடுத்தார்கள். ஆஹா!! "சிவப்பு அவரை விதையும், தோட்டக் கலை புத்தகமும்!!" திரா மகிழ்ச்சியில் கூவினாள்!! நான் என்னுடயை இந்த சிவப்பு அவரைச் செடியை நன்றாக வளர்ப்பேன்
திரா படித்தாள். அதன்படி யே செய்தாள். "நீ சிறப்பாகச் செய்திருக்கிறாய் திரா", புத்தகம் பாராட்டியது.....
திரா படித்தாள். அதன்படி யே செய்தாள்.
"நீ சிறப்பாகச் செய்திருக்கிறாய் திரா", புத்தகம் பாராட்டியது.....
இப்பொழுது தண்ணீர் விடு!
லா லா லா...பாடிக்கொண்டே தண்ணீர் ஊற்றினாள் திரா.
எனது சிவப்பு அவரை சீக்கிரத்தில் வளர்ந்தது விடும், திரா தன் நண்பர்களிடம் சந்தோஷமாகச் சொன்னாள்... அப்போது அவள் நண்பர்கள் கூறினார்கள், "எப்படி நாம் உயரமாகவும், பலசாலியாகவும் வளர நிறைய பால் குடிக்கிறோமோ அப்படி செடி நன்றாக வளர தினமும் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும்"
சிக நாட்களில், அவளது அவரைச் செடி, சின்னதாகத் துளிர் விட்டது
. "அம்மா இங்கே பாருங்கள்!! என் அவரை வளர்கிறது...." திரா சந்தோஷத்தில் கூவினாள்.
அடுத்த நாள் காலை, திரா செடிகளுக்கு மறுபடி தண்ணீர் விட்டாள். லா..லா..லா...குடி..குடி..குடி...நன்றாகக் குடி... மேலே.. மேலே.. மேலே. நன்றாக வளர்"....பாடிக்கொண்டே தண்ணீர் விட்டாள். " ஓ அன்பு திரா! அப்படி அல்ல.." புத்தகம் பேசியது...
திரா மறுபடி பகலிலும் தண்ணீர் விட்டாள்.. இப்பொழுது புத்தகம் சற்று சத்தமாகவே பேசியது... "ஓ அன்பு திரா, என் பக்கங்களில், பகல் பொழுதில் தண்ணீர் ஊற்றக் கூடாது என்று உள்ளது,"
திரா கவனிக்காமல்..தொடர்ந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தாள்... லா..லா...லா.......லா..லா...லா....
. "ஓ அன்பு திரா! நீ என்னை படிக்க மறந்து போனாய்
அம்மாவிடம் பள்ளிக்குச் செல்லும் முன் குறிப்புகள் கொடுத்தாள் ."பகல் பொழுதில் என் செடிகளுக்கு நிறைய தண்ணீர் ஊற்றுங்கள் அம்மா!" அம்மா கேட்டார்கள், " திரா! புத்தகத்தை கவனமாக படித்தாயா?"
."பகல் பொழுதில் என் செடிகளுக்கு நிறைய தண்ணீர் ஊற்றுங்கள் அம்மா!"
அம்மா கேட்டார்கள், " திரா! புத்தகத்தை கவனமாக படித்தாயா?"
ஓ என், திரா!
திரா வருத்தமானாள்....
"ஓ என் அன்பு செடியே!" ...கேவினாள்
பள்ளியில் தனது நண்பர்களுடன் இதைப் பற்றிப் பேசினாள்.. "நான் என்னுடைய இந்தச் செடிக்காக அவ்வளவு பாடு பட்டேன், பாதுகாத்தேன்!...ஆனாலும் என் செடி வாடி காணப்படுகிறது..ஏன்?
நண்பர்கள் கேட்டார்கள், அந்தப் புத்தகத்தில் ஏதாவது இதைப் பற்றி எழுதி இருக்கிறதா?
திரா நினைவு
வந்த்தவளாகக்
கூறினாள்...
ஓ! நான் அந்த புத்தகத்தைப் படிப்பதையே விட்டு விட்டேனே!!
வீட்டில், அம்மாவிடம்
தன்னுடைய செடியைக்
காட்டினாள்.
"மன்னியுங்கள் அம்மா! நான் இப்போதே புத்தகத்தைப் படித்து விடுகிறேன்" "நல்லது திரா! அப்படியே செய்" அம்மா கூறினார்கள்.
"
செடிகளுக்கு தேவைக்கு மேல் தண்ணீர் ஊற்றினால் அவைகளின் வேர் அழுகிவிடும்.
"... திரா புத்தகத்தைப் படித்தாள்.
"இலைகள் வாடி பழுப்பாகி விடும்"
"என்னை மன்னித்துவிடு
என் சிவப்பு அவரையே!"
செடியிடம் சென்று மெதுவாக கூறினாள்.
செடிகள் உன்மேல் வருத்தம் அடையாது திரா! அதற்குத் தெரியும் நீ மிகுந்த அன்பினால் தவறு செய்தாய் என்று " என்று அம்மா கூறினார்கள்.
"செடிகளை நன்கு பராமரிப்பதைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நீ அவைகளிடம் உன் அன்பை செலுத்து"
புத்தகத்திடமும் நீ உன் மன்னிப்பைக் கேளு. ஏனென்றால் நீ அதை உதாசீனப் படுத்தியதற்காக. அதற்கும் உன் கவனத்தைக் கொடு"
சில நாட்களுக்குப் பிறகு, சிவப்பு அவரை செழித்து வளர ஆரம்பித்தது. இப்போது அவளும் அந்த தோட்டக் கலைப் புத்தகமும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.