உதவும் கரம்
அன்புள்ள… எப்படியும் நீ இந்தக் கடிதத்தைப் படிக்கப் போவதில்லை, ஆகவே, இங்கே உன்னுடைய பெயரை எழுதவேண்டிய அவசியமும் இல்லை.
நீ எங்களுடைய பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கிறாய். அதனால், உனக்கு நான் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று என்னுடைய ஆசிரியை சொன்னார். ஆனால், 'வழிகாட்டி' என்றால் என்ன என்றே எனக்குத் தெரியவில்லை. அப்புறம் அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். உனக்கு வழிகாட்டியாக இருக்க நான் தயார். ஆனால், உன்னைப் பற்றிய முக்கியமான அந்த விஷயத்தை அவர் எனக்குச் சொல்லவில்லையே.