udhavi

உதவி

தேவி தன் விடுமுறையை எப்படி தவிக்கிறாள் என்பதை பற்றிய கதை.

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மாலை நேரம் தேவி பள்ளியிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மயில்கள் தோகை விரித்து ஆடும் நடனத்தை பார்த்து மகிழ்ந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை அதிகாலையில் எழுந்து பற்களை துலக்கி கொண்டாள்.

தேவி  தன் தாத்தாவோடு சேர்ந்து தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு உதவி செய்தாள்.

சிறிது நேரம் தோட்டத்தில் தான் வளர்த்த பூனையோடு சேர்ந்து விளையாடி மகிழ்ந்தாள்.

மாலை நேரம் தன் வீட்டு ஜன்னல் வழியாக பறவைகள் பாடுவதை கேட்டு மகிழ்ந்தாள்.