கடுபட் தாஸின் ‘உனக்குத் தண்ணீர் கிடையாது!’
Vetri | வெற்றி
பிரபல பாடகர் கர்தப் தாஸின் மகன் கடுபட் தாஸ். இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறான். அப்பாவைப் போலவே அவனும் படுமோசமான பாடகன். இந்த விசயம் அவனைத் தவிர எல்லோருக்கும் தெரியும். பலதரப்பட்ட சிறிய வேலைகளைச் செய்து பிழைப்பை நடத்தும் கடுபட், தன் பிரச்சினைகளைப் பெரும்பாலும் பாடியே தீர்த்துவிடுவான். ஒருமுறை அவனது பஞ்சர் கடையில் தண்ணீர் காலியாகிவிட்டது. கடுபட் தாஸ் தண்ணீர் தேடிப் போனான். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல தண்ணீர் கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை.