unarvugal

உணர்வுகள்

பொதுவாக, ஒரு குழந்தை மிகவும் ஆர்வத்தோடு அதன் பெற்றோர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கும். "சொல்... இப்போதே!" என்ற இந்தத் தொடரில், இப்படிப் பட்ட சுவாரஸ்யமான கேள்வி பதில்களை காணலாம். இந்த பாடம் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பற்றியது.

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குழந்தை ஏன் அழுகிறது?

அதற்கு பசிக்கிறது என்று நினைக்கிறேன்.

அந்த பையன் ஏன் சோகமாக இருக்கிறான்?

அவன் தன் அப்பாவிற்காக ஏங்குகிறான் என்று நினைக்கிறேன்.

அந்த குட்டிப்பெண் ஏன் சந்தோஷமாக இருக்கிறாள்?

அவள் ஒரு புதிய துணிமணி அணிந்திருக்கிறாள்.

அந்த வயதானவர் ஏன் சிரித்துக் கொண்டிருக்கிறார்?

அவர் ஒரு நல்ல நகைச்சுவையை / ஜோக்கைப் படித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த பெண்மணி ஏன் புன்னகைக்கிறார்?

அவளது பிள்ளைகள் அமைதியாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண் என்ன உணர்கிறாள்?அவள் வெட்கப்படுகிறாள் என்று நினைக்கிறேன்.