என் அப்பா என் தொப்பியை எடுத்துத்
தருகிறார்.
என் அப்பா உயரம்.
என் அம்மா என் சட்டையை எடுத்துத் தருகிறார்.
என் அப்பா என் அம்மாவைவிட உயரம்.
என் அக்கா என் புத்தகத்தை எடுத்துத்
தருகிறாள்.
என் அம்மா என் அக்காவைவிட உயரம்.
என் அண்ணன் என் பையை எடுத்துத் தருகிறான்.
என் அக்கா என் அண்ணனைவிட உயரம்.
என் அண்ணன் என்னைவிட உயரம்.
என் குடும்பத்திலேயே நான்தான்
குட்டை.
சற்று பொறுங்கள்! இதோ எங்கள்
நாய்க்குட்டி ஜோஜோ.
ஜோஜோ என் செருப்பை எடுத்துத்
தருகிறது.
ஹா ஹா! ஜோஜோ தான் எல்லோரையும்விட குட்டை.
ஆம்! ஜோஜோ என்னைவிட குட்டை.
நான் என் அண்ணனைவிட குட்டை.
என் அண்ணன் என் அக்காவைவிட
குட்டை.
என் அக்கா என் அம்மாவைவிட குட்டை.
என் அம்மா என் அப்பாவைவிட குட்டை.
ஆஹா! என் அப்பா எல்லோரையும்விட உயரம். ஜோஜோ எல்லோரையும்விட குட்டை.