vaalgal

வால்கள்

வெவ்வேறு மிருகங்களுக்கு வெவ்வேறு விதமான வால்கள். கவனித்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தில் நாம் பல மிருகங்களின் வால்களைப் பார்க்கலாம், பாடலாம், ஆடலாம்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாயி வாலப் பாரு

நல்லா வளஞ் சிருக்கு!

வாயி லிருந்து நாக்கு,

வழிஞ்சு வெளியே கிடக்கு!

குதிர வாலப் பாரு,

குஞ்ச லத்தைப் போல,

மதுர செல்லும் சால,

மகிழ்ந்து ஓடும் மேல!

கொரங்கு வாலு நீளம்,

குறும்பு ரொம்ப அதிகம்,

மரத்தி லேறி ஓடும்,

மனுஷன் போல இருக்கும்!

அணிலு வாலு பெரிசு,

அழகு, ரொம்பப் பவுசு!

துணியைப் போல மென்மை,

தூய்மை யான மனசு!

மாட்டு வாலு நாளும்

மணியைப் போல ஆடும்,

ஊட்ட முள்ள பாலை

உனக்கு அள்ளிக் கொடுக்கும்!

முதல வாலை நீட்டி

முழிச்சு முழிச்சுப் பார்த்தா,

கதறி ஓடும் ஊரு,

கலங்கும் நெஞ்சு, ஆத்தா!

சிங்க வாலு வானில்

சீறி நிற்கும் பாரு,

’தங்கள் ஆணை’ என்று

தாழ்ந்து வணங்கும் ஊரு!

பாம்புக் கெங்க வாலு?

பாம்பு தானே வாலு!

தாம்புக் கயிறப் போல

தரையைத் தழுவி ஊரும்!