vaanavil pengal

வானவில் பெண்கள்

எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரியா இருக்காங்க? எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் புடிச்சுருக்கா? எல்லாரும் ஒரே மாதிரியா ஆடை போடுறாங்க? வாங்க கொஞ்சம் சிந்திக்கலாம்.

- Arunpandian N

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீங்க சொல்லுங்க, எல்லா சின்ன பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருப்பாங்களா?

ஒரே மாதிரி தான் இருக்கனுமா?

அப்படி எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா சலித்து போகாதா?

சில பெண்கள் உயரமா இருக்காங்க.

சில பேர் குட்டையாவும் இருக்காங்க.

சில பேர் டவுசர்

போட்டு துள்ளி ஓடுவாங்க.

சிலர் கவுன் அணிவாங்க.

சிலருக்கு நீளமான பாவாடைகள் அணிய புடிக்கும்.

இன்னும் சிலர் அப்பாவோட குர்தா குள்ள போய்டுவாங்க.

சில பேரோ முடியே வச்சுருக்க மாட்டாங்க.

சில பேர் முடி சின்னதா வச்சுருப்பாங்க.

சில பேர் நீளமா வச்சுருப்பாங்க.

சில சின்ன பொண்ணுங்களுக்கு  சைக்கிள், குதிரை, குரங்கு மேல கூட சவாரி செய்ய புடிக்கும்.

சிலருக்கு மரம் ஏற புடிக்கும்.

சிலருக்கு பொம்மைகள் செய்யவும் அதை வச்சு விளையாடவும் புடிக்கும்.

சில பொண்ணுங்களுக்கு  பட்டம் விட்டு விளையாட புடிக்கும். சிலருக்கு கில்லி விளையாட புடிக்கும்.

சிலருக்கு சத்தமாப் பாட புடிக்கும்.

சிலருக்கு மெதுவா மனசுக்குள்ள பாட புடிக்கும்.

சிலருக்கு வெளியே ஓடி ஆடி விளையாடிக்கிட்டே இருக்க புடிக்கும்.

சில பெண்களுக்கு வீட்டுக்குள்ளயே அப்பாவோட மடியில உட்கார்ந்துகிட்டே இருக்க புடிக்கும்.

ஆனால் சிலருக்கு அதெல்லாம் புடிக்காது, நேரமும் இருக்காது. பழைய ஆடையும் சடை போடாத கலைந்த தலைமுடியும் தான் புடிக்கும்.

சிலருக்கு விதவிதமா ஆடை,  போட புடிக்கும்.

பெண்கள் அமைதியாகவும் இருக்கலாம்.

குறும்புக்காரங்களாவும் இருக்கலாம்,

சில நேரத்துல  அவங்க கோவமாகலம். கத்தவும் செய்யலாம்.

ஆ... ஆ... ஆ... ஆ...

சந்தோசமா, கோவமா, குறும்புகாரங்களா, ஜாலியா, அமைதியாவும் எல்லாரும் கலந்து இருக்காங்கதான் பெண்கள்.

எல்லா குழந்தைகளும் அவங்க எப்படி இருக்க ஆசைப்படுற மாதிரி அப்படியே தான் இருக்கணும். ஏனென்றால், அவர்கள் ஒவ்வொரும் தனித்துவமானவர்கள்.