vaarungal vilaiyadalaam

வாருங்கள் விளையாடலாம்!

விளையாட நண்பர்கள் தேடும் சிறுமிகள் - ஒரு குழந்தைப் பாடல்.

- Asha Priyadarshini S

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

யாரோடு யாரோடு விளையாடலாம் ?

நண்பர்களோடு நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

நாம் கற்கள் கொண்டு விளையாடலாம்.

 யாரோடு யாரோடு விளையாடலாம் ?

நண்பர்களோடு நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

நாம் ஊஞ்சல் ஆடி  விளையாடலாம்.

 யாரோடு யாரோடு விளையாடலாம் ?

நம் தங்கையோடு நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

கயிற்றை தாண்டி குதித்து  விளையாடலாம்.

 யாரோடு யாரோடு விளையாடலாம் ?

நம் தம்பிகளோடு நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

நாம் சறுக்கு மரம் ஏறி விளையாடலாம் .

 யாரோடு யாரோடு விளையாடலாம் ?

நம் அக்காவோடு நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

நாம் புதிர்கள் போட்டு விளையாடலாம்.

யாரோடு யாரோடு விளையாடலாம் ?

உறவினரோடு  நாம் விளையாடலாம்.

என்ன விளையாட்டு விளையாடலாம்?

நாம் கன்ணாம்பூச்சி

விளையாடலாம்.

யாரோடு யாரோடு விளையாடலாம் ?

ஒரு நண்பனை தேடுவேன் விளையாடவே!

யாரும் இல்லை எனில் என்செய்வேன்?

பந்தை உதைத்து விளையாடுவேன்...!