vanathu poochi

வண்ணத்துப்பூச்சி

ஒரு வண்ணத்துப்பூச்சி தன்னுடைய வாழ்க்கை சுழற்சி கதையை ஒரு சிறுமியிடம் சொல்கிறது. நாமும் கேட்டு தெரிந்து கொள்வோம், வாருங்கள்!

- Rajarajan Radhakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள், ஒரு சிறுமி அவள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது செடிகளின் நடுவே ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாள் !

அவள்  வண்ணத்துப்பூச்சியைப்  பார்த்து " எப்படி நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய் ?" என்று கேட்டாள்.

வண்ணத்துப்பூச்சி அதனுடைய கதையை சொல்ல ஆரம்பித்தது.

"ஒரு நாள் என்னுடைய அம்மா இந்த செடியில் உள்ள இலையில் சில முட்டைகளை இட்டது.

முட்டையில் இருந்து நான் வெளியே வந்தவுடன் ஒரு புழுவாக இருந்தேன்.

இலைகளை உண்டு வளர்ந்தேன்.

பிறகு ஒரு கூடு செய்து அதனுள் தூங்கினேன். "

"நான் தூங்கும்போது எனக்கு அழகான சிறகுகள் முளைத்தன.

கூட்டில் இருந்து வெளியே வந்து பறக்க ஆரம்பித்தேன்.

அப்படித்தான் நான் இங்கே வந்தேன்.

இனி நான் போகட்டுமா சிறுமியே ? "

என்று சொல்லி தன்னுடைய அழகான சிறகுகளை விரித்து பறந்து சென்றது அந்த வண்ணத்துப்பூச்சி !