முன்னொரு காலத்தில், எல்லா பறவைகளும் வெள்ளை நிறத்தில் இருந்தன.
" என்னை அழகாக்குங்கள், மந்திர தாத்தா," என்றது மரங்கொத்தி.
"வா, நான் உன்னை அழகிய நிறத்தில் வண்ணம் தீட்டுகிறேன்," என்றார் மந்திர தாத்தா.
மரங்கொத்தி இப்பொழுது சிவப்பு நிறமானது.
ஒரு சிறிய பறவை மரங்கொத்தியைப் பார்த்தது.
அதற்கும் அழகாக வேண்டும் என்ற எண்ணம்.
" இது எனக்கு மிகவும் பிடித்த பூ",என்று மந்திர தாத்தாவிடம் சொன்னது அந்த சிறிய பறவை.
"நீங்கள் என்னை, இதே நிறத்தில் மாற்ற முடியுமா?"
மந்திர தாத்தா அந்த சிறிய பறவையை மஞ்சள் நிறத்தில் வண்ணம் தீட்டினார்.
அந்த மஞ்சள் பறவை மரங்கொத்தியிடம் சென்றது.
" நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார், மரங்கொத்தியே", என்றது அந்த சிறிய பறவை.
"இல்லை,இல்லை, நான் தான் உன்னை விட அழகு" என வாதாடியது மரங்கொத்தி.
அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தது மாங்குயில்.
சண்டையின் நடுவில் சிறிய பறவையின் மஞ்சள் நிறமும் மரங்கொத்தியின் சிவப்பு நிறமும் கலந்து விட்டது. மாங்குயில் ........ ஆரஞ்சு நிறமானது!
"ஆ-ஆ-ஆரஞ்சு,
மா-மா-மாங்குயில்!
"ஆ-ஆ-ஆரஞ்சு,
மா-மா-மாங்குயில்!"
கிளிகள் மாங்குயிலை வம்பிழுத்தன.
மாங்குயில் கோபத்துடன் அவர்களை விரட்டியது.
"ஆ, மந்திர தாத்தா !" என்று கத்தியது கிளிகள். "எங்களை காப்பாற்றுங்கள்!"
"வாருங்கள், உங்கள் அனைவருக்கும் நான் பச்சை நிறத்தில் வண்ணம் தீட்டுகிறேன்," என்றார்.
கிளிகள் அனைத்தும் அவர்களின் நிறத்தை மீன்கொத்தியிடம் பெருமையுடன் காட்டியது.
" இவ்வளவு அழகான நிறங்கள் எங்கிருந்து கிடைத்தது, அன்பு கிளிகளே?"
"மந்திர தாத்தாவிடம் செல்", என்றது கிளிகள்.
மீன்கொத்திக்கு வானின் நீலம் மிகவும் பிடித்தது.
ஆகையால் அவளை நீல நிறத்தில் மாற்றினார்.
மீன்கொத்தி மரங்கொத்தியை சந்திக்கச் சென்றது.
அவர்கள் பேசிகொண்டிருக்கும் போது புறா அவர்களைப் பார்த்தது.
"ஓ, இல்லை!"
மரங்கொத்தியின் சிவப்பு நிறத்தில் கொஞ்சம், மீன்கொத்தியின் நீல நிறத்தில் கொஞ்சம் கலந்து,
புறா தன்னை ஊதா நிறத்தில் பார்த்தது,
"ஊதா நிறம் எனக்கு நன்றாக உள்ளது",என நினைத்தது.
மந்திர தாத்தா ஊதா நிறத்தில் புறாவை வண்ணம் தீட்டும் போது, அனைத்து பறவைகளும் ஒன்று சேர்ந்தன.
என்ன ஒரு அழகிய வண்ணமயமான வானவில்!