varaialaam vaanga

வரையலாம் வாங்க!

மாலாவும் பாட்டியும் வரைகிறார்கள். சில வடிவங்களைக் கொண்டு என்னென்ன வரையலாம் என்று பாருங்கள்.

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மாலா பாட்டி வீட்டுக்குச் சென்றாள்.

அங்கு நண்பர்கள் இல்லை. அதனால் அவளுக்கு சலிப்பாக இருந்தது.

மாலா: பாட்டி, என்னோட விளையாட வாங்க.

பாட்டி: சரி, போய் ஒரு சாக்கு கட்டி கொண்டுவா.

மாலா: என்ன விளையாட்டு பாட்டி?

பாட்டி: இது என்ன தெரியுமா?

மாலா: இது ஒரு வட்டம். (இது என்ன விளையாட்டு!)

பாட்டி: ஆமாம். ஆனால், இது வேற ஒன்றும் கூட.

மாலா: இது சிரிப்பு முகம்

பாட்டி: சரியா சொன்னே!

மாலா: பாட்டி நான் என்ன வரைந்தேன் பாருங்க.

மூன்று வட்டங்கள் கொண்டு நீ என்ன வரைவாய்?

பாட்டி: சரி, இது என்ன?

மாலா: முக்கோணம்!

மாலா: பாட்டி, நான் என்ன செய்தேன் பாருங்க.

பாட்டி: அருமை மாலா. நம்முடன் விளையாட யார் வந்திருக்கிறது பார்.

மூன்று வட்டங்களையும் நான்கு முக்கோணங்களையும் கொண்டு என்ன வரையலாம்?

பாட்டி நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு படம் வரைந்தார்.

மாலா: செவ்வகம்

பாட்டி: நன்றாகப் பார். நான்கு பக்கங்களும் ஒரே அளவு.

மாலா: சதுரம். நான் ஒரு சன்னல் வரைந்திருக்கிறேன் பாருங்கள்.

பாட்டி: சன்னல் பக்கத்தில் ஒரு மரம் வேண்டுமா?

மாலா: ஆமாம் பாட்டி.

ஒரு முக்கோணம், ஒரு செவ்வகம் கொண்டு என்ன வரையலாம்?

மாலா அவளது படத்தைக் காண்பித்தாள்.

பாட்டி: நிறைய வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள்! :)

மாலா: அது மட்டுமல்ல பாட்டி. இது ஒரு பறவை ஒரு மரத்தில் உள்ள அதன் வீட்டுக்குப் பறக்கிறது. வீட்டுக்கு யார் வருகிறார் தெரியுமா? அதன் நண்பன் "ஒட்டகச்சிவிங்கி"

பாட்டி: என் அறிவான பேத்தி!

மாலாவுக்கு நிறைய வரைய ஆசை.

வட்டம், முக்கோணம், சதுரம் வைத்து வேற என்ன வரையலாம்?