வயிற்றை அழுத்தி
காற்றைப் பரப்பி
வஸ் வஸ் வஸ்
கதவின் அடியே
சரிந்து சென்று
கஸ் கஸ் கஸ்
தக்காளி எறிந்து
திருடன் பிடித்து
தஸ் தஸ் தஸ்
டபக்கு குதித்து
டொபக்கு பாய்ந்து
டஸ் டஸ் டஸ்
மர்மமாய் மறைந்து
மாயங்கள் செய்து
மஸ் மஸ் மஸ்
பறந்து வானில்
பந்தயம் வென்று
பஸ் பஸ் பஸ்
சட்டெனக் கிளம்பி
உதவி செய்யும்
சஸ் சஸ் சஸ்
நல்ல பெயரை
வாங்கும் வீரன்
நஸ் நஸ் நஸ்