வெள்ளைக் கரடி வெள்ளைக் கரடி
வெளியில் சென்றதாம்
சொட்டும் தேநீர்
காதை நனைக்க...
மஞ்சள்
ஆனதாம்!
சேற்றில் வழுக்கி வயிற்றில் விழுந்து...
பழுப்பு
ஆனதாம்!
இனிக்கும் பழத்தை ருசித்துத் தின்று...
சிவப்பும்
ஆனதாம்!
கைகள் இரண்டில் பூக்கள் பறிக்க...
நீலம்
ஆனதாம்!
முதுகைச் சொறிய புல்லில் புரண்டு...
பச்சை
ஆனதாம்!
வண்ணக் கரடி வண்ணக் கரடி
குளிக்கச்
சென்றதாம்
வண்ணம் அனைத்தும் கரைந்து போக...
வெள்ளை ஆனதாம்!