vilaiyaaduvom vaanga

விளையாடுவோம் வாங்க

ரெடி, தயார்... ஓடு! விளையாட்டின் பின்னால் உள்ள அறிவியலைத் தெரிந்துகொள்!

- Saalai Selvam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரெடி...

தயார்...

ஓடு!

நான் ஓடுகிறேன்

நான் நீந்துகிறேன்

நான் சைக்கிள் ஓட்டுகிறேன்

நான் ஸ்கேட்டிங் செய்கிறேன்

நான் பட்டம் விடுகிறேன்

விளையாடும்பொழுது நாம் பயன்படுத்துபவை

விசை: ஒரு இழுப்போ தள்ளலோ நமக்கு, வேகமாகவோ மெதுவாகவோ செல்லவும் நிற்கவும் அல்லது வடிவத்தை மாற்றவும்கூட உதவுகிறது.

உராய்வு: ஒரு பரப்பு மற்றொன்றின் மேல் நகர முயலும்போது, வேகம் குறைபடுகிறது.

ஆற்றல்: நமக்கு நகரவும், ஒன்றை செய்யவும் உதவுகிறது.