வசந்தகாலத் தென்றல் சில்லென்றிருந்தது. எங்கும் பசுமையும் இதமான சூழலும் விளங்கியதால் விலங்குகள் அதிக உற்சாகத்தில் இருந்தன. மரங்கள் புதிய கன்றுகளை பெற்றிருந்தன, பழங்கள் கிளைகளை மூடியிருந்தன, பூக்களின் மணம் போதை தந்தது. இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையின் நடுவே, மகிழ்ச்சியான தேனீக்கள், புறாக்கள், கிளிகள், மயில்கள், மான்,முயல்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை காட்டில் ஓர் ஏரியில் தண்ணீர் அருந்த ஒன்றாக வந்தன.
கூட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு முயல் அனைவருக்கும்
கண்ணியமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தது, “அன்பர்களே, நாங்கள் காட்டில் வாழும் விலங்குகள். ஒரு பெரிய ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்வோம். இந்த ஒன்றுகூடலுக்கு
மனிதர்களின் பிரதிநிதிகளையும் அழைப்போம். "
பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகளும்
நாம் பகர்ந்து கொண்டு வாழும்
இந்த சூழலுக்கான
அவர்களின் குழுவின் பங்களிப்பைப்
பற்றி பேசுவார்கள்.
இந்த சந்திப்பு
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்
இடையிலான பிணைப்பை
வலுப்படுத்துவதுடன்
விலங்குகள் மற்றும் மனிதர்கள்
அனைவருக்கும் பயனளிக்கும்.''
எல்லா விலங்குகளும் முயலின் யோசனையை மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு கூட்டத்திற்கு ஒரு தேதியை நிர்ணயித்தன. மனிதர்களுக்கு அழைப்புக் கடிதம் எழுதவும் முடிவு செய்தன.
கூட்டத்தை சுவாரசியமாக்குவதற்காக
ஒரு சிறிய மதிய உணவுடன்
பாடல் மற்றும்
நடன நிகழ்ச்சி ஒன்றை
ஏற்பாடு செய்யலாம் என
மான் ஒன்று
பரிந்துரைத்தது .
.
அந்தநாளும் வந்தது. முன்பு முடிவு செய்தபடி, எல்லா விலங்குகளும் அவற்றின் சிறப்பான உடையில் வந்தன. சந்தரிஜால் மலைகளின் பசுமையான வயலில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஒரு நாட்டுப்புற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பாடலுக்குப் பிறகு, நிகழ்ச்சியைத் தொடங்க புறா தொடக்க உரையை வழங்கினார். ஃபெசண்ட் பறவை தலைவராக நியமிக்கப்பட்டார். மேடையில் சிறப்பு விருந்தினர்களாக மனிதர்களின் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தலைவர் பேச்சாளர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார்.
ஒரு பட்டாம்பூச்சி தனது உரையில், “எங்கள் குழு எல்லா இடங்களிலும் பறக்க அதன் சிறகுகளை அடித்து, அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
குறிப்பாக குழந்தைகள் எங்களை
விரும்புகிறார்கள், எங்கள் சிறகுகளைப்
பிடிக்க முயற்சி செய்கிறார்கள்." என்றது.
தங்கள் கடின உழைப்பால் சேகரிக்கப்பட்ட தேன் மனிதர்களால் எடுத்துச் செல்லப்படுகின்றது. அவர்கள் எதையும் விட்டுவிடவில்லை என்று தேனீ முணுமுணுத்தது,
தாம் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை சாப்பிடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பு செய்வதாக சிட்டுக்குருவி கூறியது. மயில்கள், கிளிகள் மற்றும் பிற பறவைகள் எல்லாம் தாம் மனிதர்களுக்கு எவ்வாறு பல்வேறு வழிகளில் இன்பம் தருகின்றன என்பதை விவாதித்தன.
மான் மற்றும் முயல் மனிதர்களுக்கு இறைச்சி மற்றும் துணிகளை எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பற்றி பேசின. "நாங்கள் மனிதர்களுக்கான பொழுதுபோக்கு வழிமுறையாக மாறிவிட்டோம்" என்று அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக அறிவித்தன.
புறாக்கள் மற்றும் ஃபெசண்ட் பறவையின் பிரதிநிதிகள்
அவர்களின் கருத்தை கூறும்படி கேட்கப்பட்டனர்.
புறா கூறினார், “நாங்கள் அமைதியின் சின்னங்கள். உலகில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். ”
ஃபெசண்ட் பறவை தாம் தேசம் சுற்றும் பறவைகள் என்பதால் தம்மால் காடு மிகவும் அழகாகிவிட்டது. அதன் காரணமாக தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை." என்றது.
அனைத்து விலங்கு பிரதிநிதிகளும் தங்கள் உரைகளை நிறைவு செய்தபின் , மனிதர்களுக்கான பிரதிநிதி மனிதர்கள் இந்தக் கிரகத்திற்கு அளிக்கும் பங்களிப்பைப் பற்றி பேச அழைக்கப்பட்டனர். இந்த கிரகத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய அனைத்து நேர்மறையான தாக்கங்களையும் பிரதிநிதி சிந்திக்கத் தொடங்கினார்.
அவர் மிகவும் சங்கடப்பட்டார்.
பின்னர் தனது உரையைத் தொடங்கினார், “மனிதர்களாகிய
நாம் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர்கள் என்று
கருதுகிறோம், ஆனால்
நாங்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நாங்கள் எங்களுக்குள்ளேயே
போராடுகிறோம். நாம் மற்றவர்களை வெவ்வேறு வழிகளில் சுரண்டுகிறோம். நாங்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடுகிறோம். ”
“இயற்கை நமக்குக் கொடுக்கும் அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.
ஆனால் இயற்கைக்கு நாம் செலுத்த வேண்டிய கடனை மறந்து விட்டோம். ”
"எங்கள் குழுவிற்கு நீர் மற்றும் மின்சாரம்
ஆறுகள் மற்றும் சமுத்திரங்களில் இருந்து
கிடைக்கின்றன ."
"நாங்கள் மரங்களிலிருந்து பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் பலகைகளைப்
பெற்றுக்கொள்கிறோம் ."
"மனிதர்களான நாங்கள் எங்கள் சொந்த நலனை மட்டுமே கவனித்து வருகிறோம். ஆகையால், அன்புள்ளவர்களே, நான் மனிதர்களை கூட்டம் ஒன்றுக்கு வரவழைத்து,
இக்கிரகத்திற்கு நாங்கள் செய்யும் பங்களிப்பைப் பற்றி விவாதிப்பேன். ”
தன் கையடக்கத் தொலைபேசியின் டுக்-டுக் ஒலியை அணைத்துவிட்டு, மனிதர் தொடர்ந்தார், “இயற்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன, மேலும் இயற்கை மனித சந்ததிக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை பரப்புகின்றது. இனி எங்கள் சமூகம் மற்றவர்களின் செலவில்
தங்கள் அரண்மனைகளைக் கட்டாது. இயற்கையின் எளிமை குறித்தும் நாங்கள் கவனம் செலுத்துவோம். ”
"மிக விரைவில், மனிதர்களின் எதிர்மறையான செல்வாக்கை அகற்றிவிட்டு, நல்ல மனிதர்களாக வாழத் தொடங்குவோம்." மனிதரிடமிருந்து இத்தகைய அறிவிப்புகளைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. எல்லா விலங்குகளும் தங்கள் முறைப்படி பாராட்டி மனிதனின் திட்டத்தை வரவேற்றன. சிறப்பு விருந்தினர்களாக மேடையில் அமர்ந்திருக்கும் மனிதர்கள் கூட தங்கள் பிரதிநிதியின் உரையை பாராட்டினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான புறா அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டு, கூட்டத்தை முடிக்க தலைவரிடம் ஒலிவாங்கியை ஒப்படைத்தது .
கூட்டத்தின் விளைவாக மனிதர்களில் ஏற்பட்ட மாற்றத்திற்காக தலைவர் என்ற
வகையில், ஃபெசண்ட் பறவை
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்கள்
நேபாளத்தின் தேசிய பறவைகளாக
தம்மை ஏற்றமைக்காக
ஃபெசண்ட் தன் நன்றியைத் தெரிவித்தது.
காடுகளில் அமைதியாக அனைத்து விலங்குகளும் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டு ஃபெசண்ட் கூட்டத்தை முடித்தது .
அனைத்து விலங்குகளும் ஒரு சிறந்த உலகத்திற்கான கனவுகளுடன் கூட்டத்தை விட்டு வெளியேறி தம் இருப்பிடங்களை அடைந்தன.