vimaanam ottalaam vaanga

விமானம் ஓட்டலாம் வாங்க!

விமானியாக வேண்டும் என்று எப்போதாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தைத் திறங்கள். விமானியறைக்குள் நுழைந்து விமானம் ஓட்டலாம், வாருங்கள்.

- Elavasa Kothanar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வணக்கம் கேப்டன். துணை விமானி பக்கத்திலிருக்கும் இருக்கையில் அமருங்கள்.

உங்கள் விமானப் பயணத்தின் விபரங்களைப் பதிவு செய்ய இந்த பொத்தான்களை அழுத்துங்கள்.

புறப்படுமிடம்

விமான எண்

விமான வெப்பநிலை

சேருமிடம்

விமானம் புறப்படும் நேரம்

தரை வெப்பநிலை

விபரங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி.

நாம் இன்று கோவா செல்கிறோமா!

புறப்படுமிடம் பெங்களூரு

விமான எண் FLT 1020

விமான வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸ்

சேருமிடம்  கோவா

விமானம் புறப்படும் நேரம் மாலை 6:00 மணி

தரை வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ்

சரி, நம் விமானத்தை ஆன் செய்யும் நேரம் வந்துவிட்டது.

கீழே இருக்கும் குமிழியை ‘ஸ்டார்ட்’ நோக்கித் திருப்புங்கள்.

இப்போது எஞ்சின்1 ஸ்விட்சை இழுத்து முதல் எஞ்சினை ஆன் செய்யுங்கள்.

அடுத்தது எஞ்சின்2 ஸ்விட்சை இழுத்து இரண்டாவது எஞ்சினையும் ஆன் செய்யுங்கள்.

நல்லது! நம் எஞ்சின்கள் இப்பொழுது பறக்கத் தயாராகிவிட்டன.

எஞ்சின்1

எஞ்சின்2

ஆன் ஆஃப்

ஆன் ஆஃப்

இயல்பு நிலை

க்ரான்க்

ஸ்டார்ட்

விமானத்தின் வெளியே இருக்கும் விளக்குகளை எரியச் செய்ய இந்த பொத்தான்களைத் தட்டிவிடுங்கள்.

அப்படித்தான்! இப்போது விளக்குகள் எரிகின்றன.

வெளி விளக்குகள்

ஸ்ட்ரோப் ஆன்

ஆஃப்

பீக்கன் ஆன்

ஆஃப்

இறக்கை ஆன்

ஆஃப்

வழிகாட்டி ஆன்

ஆஃப்

ஓடுதளம் ஆன்

ஆஃப்

தரையிறங்க

ஆன்

ஆஃப்

ஆன்

ஆஃப்

முகப்பு

ஆன்

ஆஃப்

முகப்பு

இறக்கை

இறக்கை

வழிகாட்டி

வழிகாட்டி

ஸ்ட்ரோப்

ஸ்ட்ரோப்

பீக்கன்

அந்த உந்துகோலை முன்புறமாகத் தள்ளி விமானத்தின் எஞ்சின் திறனை அதிகரியுங்கள்.

அதன்பின் நடுவில் இருக்கும் கட்டுப்படுத்தியை கீழே இழுத்து விமானத்தை மேலேறச் செய்யுங்கள்.

வாழ்த்துகள் கேப்டன்! நாம் பறந்து கொண்டிருக்கிறோம்.

அடடா! முன்னால் புயல் மேகங்களாக இருக்கிறதே.

அந்தத் தொலைபேசியை எடுத்து பயணிகளுக்கான அறிவிப்பைச் செய்யுங்கள்.

“அன்பார்ந்த பயணிகளே, விமானம் லேசாகக் குலுங்கலாம் என்பதால் அனைவரும் உங்கள் இருக்கைப் பட்டிகளை தயவுசெய்து போட்டுக்கொள்ளுங்கள்.”

கட்டுப்படுத்தியை இடப்புறமாகத் திருப்பி புயல் மேகங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

இப்பொழுது கட்டுப்படுத்தியை வலப்புறமாகத் திருப்பி விமானத்தை வலப்புறம் நகர்த்துங்கள்.

நல்லது! விமானம் இடப்புறமாகத் திரும்பிவிட்டது.

நல்ல வேலை, கேப்டன்! நீங்கள் புயலுக்குள் செல்லாமல், அதைச் சுற்றி வந்துவிட்டீர்கள்.

நம் பயணமும் முடியப்போகிறது.

நாம் விமான நிலையத்தை நோக்கிச் செல்லலாம். கட்டுப்படுத்தியை முன் நோக்கி நகர்த்துங்கள்.

இப்பொழுது விமானத்தின் மூக்குப் பகுதி தரையை நோக்கிச் சாயும்.

நம் விமானம் சேருமிடத்தை நெருங்கிவிட்டது.

இப்பொழுது அந்த லீவரை இழுத்து தரையிறங்குவதற்கான பாகங்களை வெளியே வர வையுங்கள்.

தரையிறங்கும் சக்கரங்கள் வெளியே வந்துவிட்டன.

நன்றி கேப்டன்! விமானம் தரையிறங்கிவிட்டது.

கடைசியாக இந்த சுக்கான் பெடல்களை மிதித்து விமானத்தை நிதானமாக நிறுத்துங்கள்.

சிறப்பாகத் தரையிறக்கினீர்கள், கேப்டன்! அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

விமானி அறை செய்யலாமா!  விமானிகள் சிமுலேட்டர்கள் என்ற கருவிகளின் உதவியோடுதான் விமானம் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள், பயிற்சி செய்கிறார்கள். சிமுலேட்டர் ஒரு வீடியோ கேம் போன்றது.

இது விமானத்துக்குள் ஏறாமலேயே, விமானம் ஓட்டும் அனுபவத்தைக் கொடுக்கும். நீங்களும் ஒரு சிமுலேட்டரை உருவாக்கி விமானம் ஓட்டப் பயிற்சி செய்யலாம். உங்களுக்குத் தேவையானதெல்லாம் இந்தப் புத்தகமும், தினசரிப் பயன்படுத்தும் சில பொருட்களும்தாம். உங்கள் புத்தகப் பை விமானி இருக்கையாகலாம், அட்டையொன்றை விமானத் திரையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சாப்பாட்டு டப்பாதான் உந்துகோல். தண்ணீர் பாட்டிலைக் கட்டுப்படுத்தியாகவும், உங்கள் செருப்புகளை சுக்கான் பெடலாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கற்பனையைத் தட்டிவிடுங்கள், விமானத்தைப் பறக்கவிடுங்கள்!