virunthu marunthu thottam

விருந்து மருந்து தோட்டம்

இந்த புத்தகம் தோட்டத்தில் வளரும் காய்கள் எப்படி நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது என்பதை கூறுகிறது. மேலும் படிக்க வாருங்கள்!

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வருக! வருக! இன்று, நம் தோட்டம் ஒரு கற்றல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நான் ஆரம்பிக்கலாமா?

அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்!

என் இலைகளைப் பார்த்தால் நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?

நான் தான் முள்ளங்கி!

என்னை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நான் உங்கள் செரிமானத்தை உயர்த்துவேன். என்னுடைய பசுமையான இலைகள் மலச்சிக்கலை குணப்படுத்தும், பசியைத் தூண்டும், கண் பார்வையை மேம்படுத்தும். சிலர் குரல் வளத்தை இழந்தாலோ, தொண்டையில் பிரச்சனைகள் வந்தாலோ, என்னுடைய விதைகளை மெல்ல குணம் பெறுவர்.

*என் அறிவியல் பெயர் ரேஃபநஸ் ஸேடிவஸ் (Raphanus Sativus)

எனது வாய்ப்பு!

என்றது ஒரு குரல்  குறுக்கு

நெடுக்காக அடிக்கப்பட்ட  தட்டியிலிருந்து.

வணக்கம்! நான் பாகற்காய்.* என்னுடைய சுவை கசப்பு,

ஆனால் மக்கள் என்னை குழம்பிலும், ஊறுகாயிலும்

சுவைத்து மகிழ்வார்கள்.  உயர் இரத்த அழுத்த நோய்

கொண்டவர்கள் என்னைச் சாறு ஆக்கி குடிப்பதும் உண்டு.

இது மட்டும் அல்ல, காய்ச்சல், காயம் மற்றும் நோய்

தோற்றில் இருந்தும் காப்பாற்றுவேன். என்னை கசக்கி,

களிப்பசை** போல் தீக்காயத்திற்கு போட்டு ஆற்றுவதும் உண்டு.

* என் அறிவியல் பெயர் மமார்டிக  சரந்ட்டிய( Momordica charantia )

**paste

கொத்தமல்லி* முன் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. "அனைவருக்கும் வணக்கம்! எல்லாக் குழம்பின் சுவையையும் மேம்படுத்த என்னை உபயோகிப்பார்கள்.

என்னை ஊறுகாய் போடுவதற்கும் பயன் படுத்துவார்கள். என்னுடைய விதைகளை

நசுக்கி கல்கண்டு சேர்த்து சாறு கலந்த

பானத்தைக் குடித்து கோடையில் குளிர்ச்சியாக இருப்பார்கள். என்னுடைய களிப்பசையை

நெற்றியில் தேய்த்தால் தலைவலி தணிந்து விடும்.

*என் அறிவியல் பெயர்

கோரியான்ட்ரம் சேட்டிவம் (Coriandrum sativum)

கடுகு கீரை தனது கைகளை மடித்து ஆரம்பிக்கிறது. "நான் கடுகு கீரை.  நான் வெவ்வேறு வழிகளில் எனது திறனுக்கு ஏற்றவாறு சேவை செய்கிறேன். நான் காய்கறிகள் வடிவத்திலும் மற்றும் சில நேரங்களில் மருந்தாகவும் சேவை செய்கிறேன். என்னை

உபயோகப்படுத்தி  கண்பார்வையை

மேம்படுத்தலாம் என்று

நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிளகாய் பணிவுடன் கூறுகிறது,

"வணக்கம்! நான் மிளகாய், நான் கொஞ்சம்

காரமான சுவையுடன் இருப்பேன். காரமான

உணவை விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்

என்பது எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு வேறு

பயன்கள் உள்ளன. என்னை உணவில் சேர்த்து உண்ணும் பொழுது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவேன்.

என்னை நசுக்கி, தண்ணீரில் கலந்து தோட்டத்தில்

தெளிக்கும் போது எனது நண்பர்களைப் பூச்சிக்களிடம் இருந்தும், நோய்கள் வராமலும் பாதுகாக்கிறேன். எந்த நச்சுத்தன்மை கொண்ட

பூச்சிக்கொல்லிகளையும் தெளிக்க அவசியம் இல்லை.

உங்களுக்கு தெரியுமா?

இப்போதெல்லாம் மக்கள் தங்கள் வயல்களிலும், காய்கறி தோட்டங்களிலும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகள் மிக விரைவாக வளர்கின்றன, ஆனால் பூச்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்த வழியில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பிற பயிர்களுக்கும் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லிகள் தேவை. இதன் விளைவாக, காய்கறிகள் மற்றும் மண் இரண்டும் நஞ்சாகின்றன.நச்சுத்தன்மை கொண்ட  பூச்சிக்கொல்லிகளால் தெளிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பயிர்களை சாப்பிடுவது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல நோய்களை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் மக்கள் தங்கள் மண்ணின் தரம் பாழாகிவிட்டதாக மிகவும் கவலைப்படுகிறார்கள். பயனுள்ள உரங்களை உற்பத்தி செய்வதற்கான புதிய வழிகளை அவர்கள் பார்க்கிறார்கள்.

சுவாரசியமான  குறிப்பு!

2-2.5 கிலோ வேம்பு * இலைகள் அல்லது மாடுகள் சாப்பிடாத கசப்பான இலைகளை நசுக்கவும். (நீங்கள் புகையிலை இலைகளையும் பயன்படுத்தலாம்.) இதை 20 லிட்டர் மாடு அல்லது எருமை சிறுநீரில் கலக்கவும். இந்த கலவையை சுமார் 200 லிட்டர் தண்ணீரில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும்.  உங்கள் வீட்டிலேயே  ஆரோக்கியமான பூச்சிக்கொல்லி தயாராகி விட்டது!  அது குளிர்ந்தவுடன், தோட்டத்தில் தெளிக்கவும். இதற்குப் பிறகு, பூச்சிகள் மற்றும் நோய்கள் உங்கள் தோட்டத்தில் இருக்கும் இலைகள், பூக்கள் மற்றும் பழங்களுக்கு தீங்கு விளைவிக்காது. உங்கள் தயாரிப்புகள் மனித நுகர்வுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

*அறிவியல் பெயர் -  அஜாதிரசித இண்டிக்கா (Azadirachta indica )

"வணக்கம்! நான் வெங்காயம். என்னுடைய

இலைகளை கறிகளிலும், குழம்புகளிலும்

எல்லோரும் உண்ணுவார்கள். என்னை சாலடில் அழகாக காட்டும் பொழுது நான் கௌரவிக்கப்படுவது போல

உணர்கிறேன். மக்களுக்கு,

தூக்கமின்மை மற்றும் சோர்வு

ஆகியவற்றிலிருந்து விடுபட  நான்

உதவுகிறேன். சுகாதார ஊழியர்கள் எனது

சாற்றைப் பாராட்டுகிறார்கள். என்னை பல் பிரச்சினைகளின் போது நினைவில் கொண்ட

மக்கள் விரைவில் குணம் அடைகிறார்கள்."

"இது என் முறை, இல்லையா?" பூண்டு

கூறினார். "நான் எங்கே தொடங்க வேண்டும்?  மக்கள் பல விடயங்களுக்காக  என்னை நினைவில் கொள்கின்றன. அவர்களின் வயிறு வலிக்கும் போது அவர்கள் என்

உதவியைப் பெறுகிறார்கள். அவர்களின் இருமல் அதிகரித்தால், அவர்கள் என் உதவியைப்

பெறுகிறார்கள். எல்லாவற்றிலும் நான் பயனுள்ளதாக இருக்கிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். மக்கள்

என்னை பச்சையாகவோ, சுட்டதாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு

வீடும் என்னை கவனித்துக்கொள்கின்றன. ”

பூண்டு தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு காய்கறிகளும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. தோட்டம் முழுவதும் அமைதியாக இருந்தது. ஒவ்வொரு காய்கறிக்கும் ஏதாவது முக்கியமான குணநலங்கள் இருப்பது போல் தோன்றியது!

தக்காளி * தொடங்கியது, “நான் தக்காளி.

மக்கள் எனக்கு  எல்லா  உணவுகளிலும் இடம்

கொடுத்துள்ளனர்.  எனக்கு  சாலட்டில் கூட.

ஒரு அலங்கார இடம் உள்ளது. நான் அழகாக

இருக்கிறேன் நான் முற்றிலும் சிவப்பு

நிறத்தில் இருக்கும்போது மிகுந்த நன்மை

பயப்பேன்.  நான் மக்களின் பற்களையும்

எலும்புகளையும்  வலுப்படுத்த உதவுகிறேன். ஒரு

குறிக்கதக்க விடயம் சொல்ல வேண்டும் என்றால்

என்னை சமைத்த பிறகும் கூட என்னக்குள் இருக்கும்

உயிர்ச்சத்துகள்** பாதுகாக்கப்படுகின்றன. ”

*என் அறிவியல் பெயர்  Solanum lycopersicum **vitamins

இஞ்சி * மெதுவாக தொடங்கியது, “நான் இஞ்சி. நான்

காய்கறி தோட்டத்தின் மூலையில்  வளர்ந்தாலும்,  நான் சமையலறையில் பூண்டுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளேன்.

நாங்கள் இருவரும் மசாலாவை தூக்கலாக்க உதவுகிறோம். மக்கள் சளி தொந்தரவு இருக்கும் காலத்தில் என்னை நினைவில்

வைத்துக்கொள்வார்கள். அவர்களின் தொண்டை

நெரிசலைப் போக்கவும், இருமலை போக்கவும்,

மக்கள் என்னை தேனுடன் கலந்த பாகை குடிப்பார்கள்.

மக்களுக்கு சேவை செய்வதில் நான்

மகிழ்ச்சியடைகிறேன். ”

* என் அறிவியல் பெயர்  Zingiber officinale

பின்னர் கீரை * தொடங்கியது, “நான் கீரை. அவர்கள் என்னை பாலாக் என்றும் அழைக்கிறார்கள். நல்ல பச்சை காய்கறிகளில் ஒன்றாக நான் எண்ணப்படுகிறேன்.  குடல்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறேன்.

இரத்த சோகையால் அவதிப்பட்டால் மக்கள்

என்னைத் தேடுவார்கள் *. நன்றி!"

*என் அறிவியல் பெயர்  Spinacia oleracea

“நான் வெள்ளரிக்காய் *. பூசணிக்காய்,

சுரைக்காய், நாங்கள் அனைவரும்

தண்ணிக்காய் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கிட்டத்தட்ட என் உடல் தண்ணீரில் நிரப்பப்பட்டுள்ளது.

நான் மக்கள்  சாப்பிட்ட உணவை செரிமானிக்க

உதவுகிறேன். சிறுநீர் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க உதவுகிறேன். என் விதைகளால் அதிசயங்கள் செய்ய

முடியும்.  அதனால்தான்  குரலை இழந்து, வயிற்றில் புழுக்கள் இருக்கும் அல்லது வாயில் புண்கள் இருக்கும் மக்கள் எனது உதவியை எடுப்பதும் உண்டு.”

*என் அறிவியல் பெயர்  Cucumis sativus

பூசணி தன்னைப் பற்றி பேசத் தொடங்கியது. “மக்கள் என் தண்டுகளையும் பழத்தையும் கறிகளாக சாப்பிடுகிறார்கள். மக்கள் என்னை சாப்பிட்டு பற்கள், ஈறுகள், நரம்புகள், கண்கள்,

முடி மற்றும் நகங்களை

ஆரோக்கியமாக வைத்து கொள்கிறார்கள்.

பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால்

பாதிக்கப்படுகின்ற மக்கள்  என்

விதைகளின் உதவியை எடுப்பார்கள்.

அவர்களுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும்போது

- குறிப்பாக நாடாப்புழு - அவர்கள் என்னைத்

தேடிப் போகிறார்கள். "

அடுத்தது, சுரைக்காய்* தனது அறிமுகத்தைத்

தொடங்கியது. "நான் சுரைக்காய். மக்கள் என்

சாற்றை அருந்தி தங்கள் உடலை சுத்திகரித்துக்

கொள்வார்கள்."

*என் அறிவியல் பெயர்  Lagenaria siceraria

முள்ளங்கி மிகவும் ரசித்து கொண்டு இருந்தது, "இன்று நம் அனைவரையும் பற்றி பல குணங்களை கண்டறிந்தோம்.  உங்களிடையே இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக

உணர்கிறேன். நம்மில் யாரும்

பயனற்றவர்கள் அல்ல. நாங்கள்

எங்களால் முடிந்ததை  தாழ்மையுடன்,

மகிழ்ச்சியுடன் வழங்குகிறோம்.

எங்கள் வாழ்க்கை உண்மையில்

ஆசீர்வதிக்கப்பட்டது! "

அனைத்து காய்கறிகளும் முணுமுணுக்க ஆரம்பித்தன, ஒரே குரலில், "அன்புள்ள மனிதர்களே, எங்களுக்கு ஆரோக்கியமான மண்ணையும், ஆரோக்கியமான சூழலையும் கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கண்டிப்பாக வழங்க  முடியும்" என்று கூறினர்.