vivasayam

விவசாயம்

எப்படி தாத்தா தண் விவசாயகிராமத்தை காப்பாற்றினார் என்பதை இக்காதயில் தெரிந்துகொலுங்கள்

- Kilimozhi Palani

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் நெற்பயிர்களை பயிரிட்டு வந்தார். அந்த கிராமம் முழுவதும் பசுமையாக இருக்கும் .மக்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.

திடீரென்று ஒருநாள் அந்த கிராமத்தில் பால் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தனர்.

அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவு நீரால் விவசாயம் மற்றும் மக்கள் பாதிப்படைந்தனர்.

ஊர் மக்களைத் திரட்டி அந்த தாத்தா போராட்டம் நடத்தி, தொழிற்சாலையை மூடச் செய்தனர். இதை கண்டு மற்ற விவசாயிகளும் மகிழ்ச்சியோடு விவசாயம் செய்ய முன் வந்தனர்.