சூரியன் காலையில் எழுகிறது.
நானும் எழுகிறேன்.
அண்ணா பாட்டு பாடுகிறான்.
நானும் பாடுகிறேன்.
அம்மா காலை உணவு சமைக்கிறார்.
நான் அதைப் பார்க்கிறேன்.
அப்பா காய் நறுக்குகிறார்.
நான் அவருக்கு உதவுகிறேன்.
பாப்பா விளையாடுகிறாள்.
நானும் அவளுடன் விளையாடுகிறேன்.