yaanai

யானை

ஒரு பயந்த யானையை பற்றிய கதை

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு குட்டி யானை ஒன்று தனியாக இருந்தது . அது மிகவும் பயந்த குணம் கொண்டது.

ஒரு நாள் அந்த யானை தேங்காய் விழுந்த சத்தம் கேட்டு பயந்து ஓடி கொண்டு இருந்தது.

அதை பார்த்த முயல் ஒன்று யானையை நிறுத்தியது .முயல் யானையிடம் பயப்படாமல் இருக்குமாறு கூறியது.பிறகு அந்த சத்தம் தேங்காய் விழுந்த சத்தம் என்று கூறியது.

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர் . முயலும் யானையும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவார்கள்.

ஒன்றாக சேர்ந்து பேசி சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தனர்.