ஒரு ஊரில் ராமு என்ற விவசாயி இருந்தார். ஒருநாள் அவரின் தோட்டத்தில் உள்ள வாழை மற்றும் பயிர்கள் எல்லாம் சேதமடைந்தது. யார் நம்முடைய தோட்டத்தை சேதப்படுத்தி, என்பதை கண்டறிய மேளம் தட்டினார்.
அவர் விடிய விடிய மேளம் தட்டிக்கொண்டே இருந்தார். காலையில் சூரியன் உதிக்க ஆரம்பித்தது. ஆனால் எந்தவொரு விலங்குகளும் வரவில்லை. பிறகு அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
மறுநாள் அவர் வயலுக்கு வரவில்லை. அப்பொழுது இரு யானைகள் வயலில் விவசாயி இருக்கிறாரா என்று பார்க்க வந்தன. அங்கே அவர் இல்லை என்றவுடன் அந்த இரு யானைகளும்,ஆனந்தமாக நடனம் ஆடின.
பிறகு அந்த யானைகள் தன் கூட்டத்தை அழைக்க பிளிறியது. பின்பு யானைக் கூட்டம் வந்தது. அவை வாழை மற்றும் பயிர்களை தின்றும் மிதித்தும் நாசம் செய்தன. ராமுவும் மற்ற விவசாயிகளைப் கூட்டிக்கொண்டு வந்தார்.
எப்படியாவது யானைக் கூட்டத்தை துரத்த வேண்டும் என்று ஒற்றுமையாக செயல்பட்டனர். எல்லோரும் மேளம், வேல் கம்பு, ஈட்டி கொண்டு யானைகளை துரத்தினர்.
பிறகு யானைகளும் விவசாயிகளின் சத்தம், கூக்குரல்களை கேட்டு யானைகள் பயந்து காட்டிற்குள் சென்றன. பிறகு ராமுவும் மற்ற விவசாயிகளும் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றனர்.