அய்யா! இது தான் யானை .எவ்வளவு பெரிய உருவம்,கருப்பு வண்ணத்தில்
வெள்ளை நிற தந்தத்துடன் இருக்கிறதே! கரும்பை விரும்பி உண்ணுகிறதே!
குதிரை என்ன உண்ணுகிறது! வாழைத்தண்டு நீளமான வால் உள்ளதே!
வேகமாக ஓடுமல்லவா!
காட்டின் ராஜாவான சிங்கம் பார்க்கும்போதே அதனுடைய கம்பீரத்திலே தெரிகிறதே!
சிங்கம் என்ன உண்ணுகிறது? இறைச்சி பிடரிமுடி நீளமாக இருக்கிறதே!அடுத்து என்ன விலங்கு என்று பார்க்கலாம்.
பசு அழகாக அமைதியாக இருக்கிறதே! பசுவின் பால் குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமானது.
பசு உணவாக எதனை உண்ணுகிறது வைக்கோலை பசியால் வெகமாக மென்று தின்னுகிறதே!
சேவல் என்ன செய்யுகிறது.தினமும் அனைவரையும் அதிகாலையில் எழுப்பி விட முயற்சிக்கிறது.அது என்ன உண்ணப்போகிறது?
சேவல் என்ன உண்ணுகிறது சோளத்தை விரும்பி தின்னுகிறது.
பிறகு அனைத்தும் தனக்குப் பிடித்த உணவுகளோடு கடைசிப்புகைப்படத்தில்
காட்சியளிக்கிறது.காட்டிற்கு சென்று வந்ததுபோல் ஒரு உணர்வு தோன்றுகிறது.
இரவு அனைத்து விலங்குகளும் உறங்குவதற்காக கூடாரத்திற்குச் சென்றன.
இது ஒரு மிருகக்காட்சி.இங்கிருக்கும் விலங்குகளைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொண்டோம்.